1,159 அங்கத்தினர்களைக் கொண்ட தமிழ்க்குடில் குழுமம் துவங்கிய ஓராண்டில் தமிழ்க்குடில் அறக்கட்டளையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்க்குடில் அறக்கட்டளை 2012 மே மாதம் 21ஆம் திகதி பதிவு(பதிவு எண் 18 IV 12) செய்யப்பட்டு, 2012 ஜுன் 10ஆம் திகதி சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்ற தமிழ்க்குடிலின் முதல் ஆண்டுவிழாவில் புலவர் திரு.புலமைப்பித்தன், ஐயா.சிலம்பொலி செல்லப்பா, கவிஞர். திரு.அறிவுமதி, கவிஞர் திரு.இராஜ.தியாகராஜன், கவிஞர்.திரு.இரவா.கபிலன் அவர்கள் பங்கேற்க சிறப்பாக நடைபெற்றது. தமிழ்க்குடில் அறக்கட்டளையின் துவக்கமாக சுமார் 20 குழந்தைகளுக்கு விழா மேடையில் ஐயா திரு.சிலம்பொலி செல்லப்பா அவர்கள் தமிழ்க்குடில் அறக்கட்டளை சார்பாக சுமார் 20 பள்ளிக்குழந்தைகளுக்கு உதவிகளை வழங்கினார். தமிழ்க்குடில் அறக்கட்டளை துவங்கி ஆறு மாதத்தில் இதுவரை சுமார் 60 குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்பிற்குத் தேவையான உதவிகளை வழங்கி உள்ளது.
செப்டம்பார் மாதம் 2012இல், உண்ணாமலைக் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணிற்கு தேர்வுக்கட்டணத்திற்கென ரூ.11,800/- வழங்கியுள்ளது.
டிசம்பர் மாதம் திருப்பூரில் இருக்கும் மூன்று அரசுப்பள்ளிகளுக்கு ஒலி உள்வாங்கி அமைப்பு, பள்ளி நூலகத்திற்கு அகராதிகள் மற்றும் தேவையான இதர பொருட்கள் வாங்கிக்கொடுத்து மூன்று பள்ளிகளிலும் 90 மரக்கன்றுகளையும் வழங்கி குழந்தைகள் மூலம் நடப்பட்டது.
தமிழ்க்குடில் அறக்கட்டளை அடுத்த முயற்சியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தையடுத்த சிலம்பூர் கிராமத்தில் இணைய வசதியுடன் கூடிய ஒரு நூலகத்தைக் கட்டியுள்ளது. நூலகத்தின் புகைப்படமும், நூலகத் திறப்புவிழா பற்றிய விவரங்களும் அடுத்தடுத்தப்பதிவுகளில் பகிரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழமைகளின் ஆதரவும்,ஒத்துழைப்பும் இல்லையெனில் இவையனைத்தும் எங்களால் சாத்தியமாகி இருக்காது . அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.
தமிழ்க்குடில் அறக்கட்டளையின் நூலகத்திற்குத் தேவையான நூல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம். நன்கொடையாக நிதிவழங்க விருப்பம் உடைய தோழமைகள் அதிக விவரங்களுக்கு நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளவும்.
நூல்கள் வழங்க விருப்பம் உடையவர்கள் அரிய வகைத் தமிழ் நூல்கள் (சங்க இலக்கியம், இலக்கணம், மருத்துவம், ஓலைச்சுவடி, ஆய்வுக்கட்டுரைகள் போன்ற நூல்கள்) கணினி மற்றும் நூல்கள் வைக்கும் அலமாரி இவைகளை அவரவர் விருப்பமும், வசதிக்குமேற்ப வழங்கலாம்.
தமிழ்க்குடில் அறக்கட்டளையின் செயல்பாடுகளை விவரமாக அறிய
தமிழ்க்குடில் அறக்கட்டளை யின் பக்கத்தினைப் பார்க்கவும். தமிழ்க்குடில் அறக்கட்டளைக்குத் தங்களது தொடர்ந்த ஆதரவை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன் தமிழ்க்குடில் நிர்வாகம்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!! வெல்க தமிழ்!!!