August 17, 2013

நூலகம் - உட்புறத்தோற்றம்


அன்புத்தோழமைகளுக்கு தமிழ்க்குடிலின் அன்பான வணக்கம். 

தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் அரியலூர் மாவட்டம், சிலம்பூர் கிராமத்தில் இணைய வசதியுடன் கூடிய நூலகத்தின் முகப்புத்தோற்றம் மற்றும் இயற்கை சூழலில் படிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் இருக்கைகளின் புகைப்படங்கள் தங்கள் பார்வைக்காக சென்ற பதிவில் பகிர்ந்திருக்கிறோம். தற்சமயம் நூலகத்தின் உட்புறத் தோற்றத்திலிருந்து சில புகைப்படங்கள் தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். 
நூலகத்தின் உள்நுழைவாயில்
                                                        நூல்கள் வைக்குமிடம்
                             கணினி வைக்குமிடம
                          நூலகம் இரவுத்தோற்றம்



தமிழ்க்குடிலின் முயற்சிகள் அனைத்திற்கும் உடன் இருந்து பக்கபலமாய் கரம் கொடுத்துவரும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் தமிழ்க்குடில் தமது நெஞ்சார்ந்த நன்றியினை அறிவிக்கிறது. 

நூலகத்திற்காக நூல்கள், நிதிகள் வழங்க விருப்பம் உடைய அன்பர்கள் விவரங்களுக்கு நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

என்றென்றும் அன்புடன்
தமிழ்க்குடில் நிர்வாகம். 

வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!! வெல்க தமிழ்!!!


4 comments:

  1. குடில் தோற்றம் தமிழோடு ஒன்றி இருக்கு குடில் மென்மேலும் வளர எமது வாழ்த்துகள்!!!!

    ReplyDelete
  2. வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றியும், மகிழ்ச்சியும். தொடர்ந்து இணைந்திருக்கவும்..:)

    ReplyDelete
  3. நூலகம் பற்றிய செய்திகள் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா..தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி. தங்களின் வாழ்த்து நம் செயல்பாடுகளை சிறக்க செய்யட்டும். தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறோம். _/\_

      Delete

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_