டிசம்பர் மாதம் 17ம் தேதி திருப்பூரில் உள்ள அய்யன் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குத் தேவையான சுமார் ரூ.6000/-(ஆறாயிரம்) மதிப்புள்ள 50 ஆங்கில அகராதியும், அங்கு படிக்கும் தாய்/தந்தையரை இழந்த குழந்தைகளின் தேவையை நேரில் அறிந்து அவர்களுக்கு ரூ.5000/-க்கு பொருள்கள் (ரூபாய் ஐந்தாயிரம்) வாங்கித் தரப்பட்டது.
டிசம்பர் மாதம் 17ம் தேதி திருப்பூரில் உள்ள பிச்சம்பாளையம் புதூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.5000/-(ரூபாய் ஐந்தாயிரம்) மதிப்புள்ள ஒலிவாங்கி அமைப்பு தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கியது. மேலும் ரூ.2000/-(ரூபாய் இரண்டாயிரம்) ரூபாய்க்கு பள்ளிக்குத் தேவையான பொருட்களும் வழங்கப்பட்டன.
மரக்கன்று நடுதல்
நிலத்தடி நீரின் அவசியம் உணர்த்தி விழிப்புணர்வு ஊட்டல் என்ற நமது நோக்கத்தை செயல்படுத்த டிசம்பர் மாதம் 17ந்தேதி 2012 திருப்பூரில் இருக்கும் இரண்டு அரசுப்பள்ளிகளில்(பிச்சம்பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அய்யன் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி) மூலம் 100 மரக்கன்றுகள் திருப்பூர் பகுதியில் நடப்பட்டது.மரக்கன்றுகளை பராமரிக்கும் பொறுப்பை மாணவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.
சிறப்பாக வளர்ப்பவர்களுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறையாக, மூன்று வருடங்களுக்கு இந்தப் பரிசுகளை தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்க்குடில் அறக்கட்டளையின் சேவைப்பயணத்தில் உறுதுணையாக இருந்துவரும் அனைத்துத் தோழமைகளுக்கும் தமிழ்க்குடில் தமது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிக்கிறது. தங்களுடைய தொடர்ந்த ஆதரவினை தமிழ்க்குடிலுக்கு வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன் தமிழ்க்குடில் நிர்வாகம்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!!! வெல்க தமிழ்!!!
அன்புடன் தமிழ்க்குடில் நிர்வாகம்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!!! வெல்க தமிழ்!!!
No comments:
Post a Comment
தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_