Showing posts with label அறக்கட்டளை அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறக்கட்டளை அறிவிப்பு. Show all posts

September 09, 2016

தமிழ்க்குடில் நூலகத்தின் நான்காமாண்டு துவக்கம்.

அன்புத்தோழமைகளுக்கு,

தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள்.

அரியலூர் மாவட்டம் சிலம்பூர் கிராமத்தில் தமிழ்க்குடில் அறக்கட்டளை, பிரசவித்த நூலகக்குழந்தைக்கு இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதைத் தங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம். :) :)
தமிழ்க்குடிலின் செயல்பாடுகளில் தொடர்ந்து பங்கேற்றும், ஊக்கமும் நம்பிக்கையும் அளித்தும் எங்களோடு கரம்கோர்த்து பயணித்து வரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கணினி வசதியுடன் கூடிய நூலகத்தின் புகைப்படங்கள் விரைவில் பகிர்கிறோம்.

என்றென்றும் அன்புடன்,

தமிழ்க்குடில் அறக்கட்டளை.

December 11, 2015

மிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் “மகாகவி பாரதியின் 134 வது பிறந்தநாள் விழா போட்டிகள்.”

தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் “மகாகவி பாரதியின் 
134 வது பிறந்தநாள் விழா கவிதைப் போட்டி.”


அன்புத் தோழமைகளுக்கு,

தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கம். தாங்கள் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ”மகாகவி பாரதியின் பிறந்தநாளை” முன்னிட்டு ”தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும்” கவிதைப் போட்டியினைத் தங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தோழமைகள் அனைவரும் பெருமளவில் பங்குகொண்டு போட்டியினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
கவிதை போட்டி விதிமுறைகள்:
1. தலைப்பு : தாங்களே தங்களால் படைக்கப்படும் கவிதைக்குப் பெயரிட்டு அனுப்பலாம்.
2. கவிதையின் தன்மை: தங்களால் எழுதப்படும் கவிதை எந்தவகையினைச் சார்ந்தது என குறிப்பிடவும். (உ.ம்) புதுக்கவிதை, மரபுக்கவிதை,
3. 20 வரிகளுக்குக் குறையாமலும் 50 வரிகளுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.
4. கவிதை வேறு எந்த போட்டிக்கோ, இதழுக்கோ அனுப்பப்பட்டதாகவோ அல்லது வேறு எங்கும் பதிவிடப்பட்டதாகவோ இல்லாமல், தமிழ்க்குடிலின் இந்தப்போட்டிக்காக மட்டுமே பிரத்தியேகமாக எழுதப்பட்டவையாக இருக்கவேண்டும்.
5. ஒரு கவிஞர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பவேண்டும்.
6. உங்களுடைய சொந்த படைப்பாக இருக்கவேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி
படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 25.12.15
படைப்புகள் tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்படவேண்டும். குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது. முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.
பரிசு விவரம்:
முதல் பரிசு: தமிழ்க்குடில் வழங்கும் நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்.
இரண்டாவது பரிசு: தமிழ்க்குடில் வழங்கும் நினைவுப்பரிசு
மற்றும் சான்றிதழ்.
மூன்றாவது பரிசு: நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்.
இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்ந்து அனைவரும்
ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.

September 08, 2015

தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் போட்டிகள் - 2015


தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் போட்டிகள் - 2015


அன்புத்தோழமைகளுக்கு,
தமிழ்க்குடில் நிர்வாகியின் அன்பு வணக்கம்.
ஜூலை மாதம் உயர்திரு காமராசர் அவர்களின் பிறந்த தினம் மற்றும் தமிழ்க்கடல்திரு மறைமலை அடிகளாரின் 139வது பிறந்ததினத்தை (15 ஜூலை) முன்னிட்டும் தமிழ்க்குடில் அறக்கட்டளை சொற்பொழிவு மற்றும் கட்டுரை போட்டி அறிவித்திருந்தது. அதிகப்படியான போட்டியாளர்கள் பங்குகொள்ளும்பொழுதுதான் போட்டி சுவாரசியமடையும் என்பதாலும் பலரின் வேண்டுகோளை கருத்தில் கொண்டும் போட்டியின் கால அளவை இந்த மாதம் இறுதி வரை நீட்டித்திருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தோழமைகளும் ப்ங்கு கொண்டு தங்கள் நட்பு வட்டத்திலும் பகிர வேண்டுகிறோம்.

தமிழ்க்கடல் திரு மறைமலை அடிகளாரின் 139வது பிறந்ததினத்தை (15 ஜூலை) முன்னிட்டு அவரின் தமிழ்த்தொண்டை நினைவுகூரும் வகையில் தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும்சொற்பொழிவு போட்டி.
போட்டி விவரங்கள்.
போட்டி எண் – 1
போட்டி - சொற்பொழிவு.
தலைப்பு - ”மறைமலை அடிகளாரும் அவரின் தமிழ்த்தொண்டும்”
விதிமுறை - மேலேகுறிப்பிட்ட தலைப்பில் சொற்பொழிவுக்கான கருத்து தயார் செய்து அவரவர் குரலில் சொற்பொழிவாக 10 நிமிட கால அளவு இருக்கும்படி பதிவு செய்து (MP3 Format)ஒலிவடிவில் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம். ஒலிப்பதிவு செய்யும்பொழுது தங்களைப்பற்றிய எந்த விவரமும் கொடுக்காமல் சொற்பொழிவு மட்டும் பதிவு செய்து வழங்கவேண்டுகிறோம். தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரி மற்றும் புகைப்படம் இவற்றை ஒலிப்பதிவு அனுப்பும் மின்னஞ்சலில் இணைத்து அனுப்பிட வேண்டுகிறோம்.
போட்டி இறுதி நாள் : 30.09.2015
மின்னஞ்சல் முகவரி : tamilkkudil@gmail.com
பரிசு விவரம் : முதல் பரிசு தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சிறப்புப்பரிசு மற்றும் சான்றிதழ், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசு நூல் மற்றும் சான்றிதழ்.
...........................
போட்டி எண் – 2

திரு காமராசர் அவர்களின் 112 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் இரண்டாம் ஆண்டு கட்டுரைப் போட்டி
போட்டி : கட்டுரைப்போட்டி
தலைப்பு :
1. தனிமனிதனாகக் காமராசர்
2. தேசியத்தலைவராகக் காமராசர்
3. நிர்வாகியாகக் காமராசர்
4. அரசியல்வாதியாக காமராசர்
விதிமுறை:
1. போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம்
2. குறைந்தது 4 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.
3. படைப்புகள் வேறு எங்கும் பகிர்ந்ததாகவோ, அச்சிடப்பட்டதாகவோ இல்லாமல் தமிழ்க்குடிலின் போட்டிக்காக பிரத்யேகமா எழுதி அனுப்பவேண்டும்.
4. கட்டுரைகள் காப்பி பேஸ்ட்டாக இல்லாமல் தங்கள் வாழ்வில், உங்கள் பார்வையில் நீங்கள் திரு.காமராசரை உணர்ந்த விதத்தில் கட்டுரைகள் படைக்க வேண்டுகிறோம்.
இறுதி நாள் : 02.10.2015
படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை tamilkkudil@gmail.comஎன்ற மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படவேண்டும்.
படைப்புகளை லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து வேர்டு ஆவணமாக அனுப்பவேண்டுகிறோம். தங்கள் படைப்புகள் எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.

முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.
பரிசு விவரம்:
முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு, வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலட்சை(லோகோ) பொறிக்கப்பட்ட பதக்கம் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி போட்டிக்காக வரும் கட்டுரைகளில் சிறந்தபடைப்புகள் தேர்வு செய்யப்பட்டு நூலாகவும் அச்சிடப்படும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும்,
கொள்ள வேண்டுகிறோம்.
நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக. அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் மற்றவர்களையும் எழுத ஊக்குவித்து இந்தப்போட்டியினை சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன் தமிழ்க்குடில் நிர்வாகம். :)

July 22, 2015

மறைமலை அடிகளார் பிறந்ததின சொற்பொழிவு போட்டி


அன்புத் தோழமைகளுக்கு வணக்கம்.

உயர்திரு மறைமலை அடிகளாரின் பிறந்ததினத்தை(15 ஜூலை) முன்னிட்டு ., அவரின் தமிழ்த்தொண்டை நினைவுகூரும் வகையில் தமிழ்க்குடில் அறக்கட்டளை மாறுபட்ட போட்டி நடத்தவிருப்பதாக அறிவித்திருந்தது தாங்கள் அறிந்ததே.  

போட்டி விவரங்கள்.

போட்டி - சொற்பொழிவு.

தலைப்பு  - ”மறைமலை அடிகளாரும் அவரின் தமிழ்த்தொண்டும்”

விதிமுறை - மேலேகுறிப்பிட்ட தலைப்பில் சொற்பொழிவுக்கான கருத்து தயார் செய்து அவரவர் குரலில் சொற்பொழிவாக பதிவு செய்து(MP3 Format ) ஒலிவடிவில் தமிழ்க்குடில் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறோம்.  ஒலிப்பதிவு செய்யும்பொழுது தங்களைப்பற்றிய எந்த விவரமும் கொடுக்காமல் சொற்பொழிவு மட்டும் பதிவு செய்து வழங்கவேண்டுகிறோம்.  தங்கள் பெயர்,தொடர்பு எண், முகவரி புகைப்படம் இவற்றை மின்னஞ்சலில் மட்டும் அனுப்பிட வேண்டுகிறோம். 

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் - tamilkkudil@gmail.com

அனுப்பவேண்டிய இறுதிநாள் - 10.08.15

பரிசு : முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு நூலும், சான்றிதழும் வழங்கப்படும்.

ஒவ்வொரு போட்டியும் நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கருதி பங்குகொள்ள வேண்டுகிறோம்.

நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக. அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் ஆர்வமுடைய மற்றவர்களிடத்தும் பகிர்ந்துகொண்டு தமிழ்க்குடிலின் தொடர்ந்த அனைத்துப் போட்டியினையும் சிறப்பித்துத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

என்றென்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.

July 17, 2015

கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்ததின கட்டுரைப்போட்டி


அன்புத் தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள்.
திரு காமராசர் அவர்களின் 112வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் இரண்டாம் ஆண்டு கட்டுரைப்போட்டியினை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
போட்டி: கட்டுரைப்போட்டி
தலைப்பு :
1. தனிமனிதனாகக் காமராசர்
2. தேசியத்தலைவராகக் காமராசர்
3. நிர்வாகியாகக் காமராசர்
4. அரசியல்வாதியாகக் காமராசர்
விதிமுறை:
போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம்.
குறைந்தது 3 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.
படைப்புகள் வேறு எங்கும் பகிர்ந்ததாகவோ, அச்சிடப்பட்டதாகவோ இல்லாமல் தமிழ்க்குடிலின் போட்டிக்காக பிரத்யேகமா எழுதி அனுப்பவேண்டும்.
கட்டுரைகள் காப்பி பேஸ்ட்டாக இல்லாமல் தங்கள் வாழ்வில், உங்கள் பார்வையில் நீங்கள் திரு.காமராசரை உணர்ந்த விதத்தில் கட்டுரைகள் படைக்க வேண்டுகிறோம்.
படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 15.08.15
படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்படவேண்டும். குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.
படைப்புகளை லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து வேர்டு ஆவணமாக அனுப்பவேண்டுகிறோம். தங்கள் படைப்புகள் எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.
முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.
பரிசு விவரம்:
முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு, வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலச்சினை(சின்னம்-Logo) பொறிக்கப்பட்ட பதக்கம் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி போட்டிக்காக வரும் கட்டுரைகளில் சிறந்தபடைப்புகள் தேர்வு செய்யப்பட்டு நூலாகவும் அச்சிடப்படும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.
நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக. அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் மற்றவர்களையும் எழுத ஊக்குவித்து இந்தப்போட்டியினை சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.

July 06, 2015

2015 - அன்னையர் தின கட்டுரைப்போட்டி முடிவுகள்.

அன்பு சொந்தங்களுக்கு அன்பான வணக்கம்,
2015 ஆம் ஆண்டு அன்னையர் தினத்தை முன்னிட்டு “தமிழ்க்குடில் அறக்கட்டளை” நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிய ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் தங்களுக்கு இதோ முடிவுகள் விவரம்..
முடிவுகள் அறியும் முன்பு, தங்களுடைய வாழ்க்கைப்பணி, தமிழ்ப்பணி மற்றும் சமூகப்பணி என பல பணிகளுக்கு நடுவில், தங்களுடைய சிரமம் கருதாமல் நம் தமிழ்க்குடிலுக்காக குறுகிய கால அவகாசத்தில் சிறந்த கட்டுரைகளைத் தேர்வு செய்து கொடுத்த நடுவர்கள் பற்றிய சிறு அறிமுகம். நடுவர்களுக்கு தமிழ்க்குடில் குடும்ப உறுப்பினர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் நிர்வாகம் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
கட்டுரைப் போட்டியின் நடுவர்கள்
1. உயர்திரு. முனைவர் க. இராமசாமி. செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவலராக விளங்கும் முனைவர் க.இராமசாமி அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் பிறந்தவர். மொழியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மொழியியல் துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர். ஆங்கிலம்,இந்தி, வங்களாம், கன்னடம் உள்ளிட்ட பலமொழிகளை அறிந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் பணியில் இருந்தவர். 1983 முதல் 2003 வரை மைசூர்இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில்(CIIL) துணை இயக்குநராகப் பணியாற்றியவர். மைசூரில் பணியாற்றிய காலத்தில் தமிழ்ச் சிற்றிதழ்களை ஊக்குவிக்கும் வகையில் பல தமிழ்ச் சிற்றிதழ்களுக்கு நிதியுதவி கிடைப்பதற்கு உதவியாக இருந்தவர். தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பலவகையில் பாடுபட்டுள்ளார். இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கப்பெற்றதும் அதன் பொறுப்பு அலுவலராக இருந்து நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கப்பணிகள் பலவற்றைச் செய்து வருபவர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணிகள் பலவற்றிற்குக் கால்கோள் இட்ட பெருமை முனைவர் க.இராமசாமி அவர்களுக்கு உண்டு.
2. எழுத்தாளர் திருமதி. ஷைலஜா – பெங்களூரில் வசித்துவரும் திருமதி ஷைலஜா, சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், ஓவியம், பாடகி, நடிப்பு, பிண்ணனிக் குரல், அறிவிப்பாளர் என அனைத்துத் துறையிலும் சிறந்துவிளங்குபவர்.
கனடாவிலிருந்து இணையம் வழி ஒலிபரப்பான பண்பலையில் அறிவிப்பாளராகக் கடமையாற்றிய இவர் இதுவரை 270 சிறுகதைகள்,12 நாவல்கள்,2 குறுநாவல்கள்,5 தொடர் கட்டுரைகள்,12 வானொலிநாடகங்கள்,3 தொலைக்காட்சி நாடகங்கள் எழுதி இருக்கிறார். இன்னும் தொடர்ந்து சர்வதேச இதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிவருவதோடு, விளம்பரப்படங்களுக்கும் குறும்படங்களுக்கும் பின்னணிக் குரல் தருகிறார். எழுத்திற்காக பல விருதுகளையும் பரிசுகளையும் வென்றிருக்கும் இவரது சிறுகதைகள் சிலகன்னட மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.
கட்டுரைப்போட்டி:
முதல் பரிசு : முனைவர் ஜ. பிரேமலதா , சேலம் -(அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை. )
இரண்டாம் பரிசு : திருமதி வசந்தா ராமன், காசியாபாத், (தில்லி) - (அன்பின் அவதாரம் தாய்)
மூன்றாம் பரிசு : நர்கீஸ் பானு, ஐக்கிய அரபு அமீரகம்
- (அன்னை ஒரு வரம்)
பரிசு பெற்ற மற்றும் போட்டியில் பங்குகொண்ட அனைவருக்கும் நடுவர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் குடும்ப உறுப்பினர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்க்குடிலின் தமிழ்த்தோட்டத்தில் மலர்ந்து மணம்வீசும் மலர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும், வாழ்த்துகளும். இனிவரும் போட்டிகளிலும் தொடர்ந்து பங்குகொண்டு சிறப்பித்து தமிழ்க்குடிலின் செயல்பாடுகளில் தொடர்ந்திருக்க வேண்டி வாழ்த்தி விடைபெறுகிறோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பற்றிய நடுவரின் சிறு குறிப்பு பரிசுபெற்றக் கட்டுரைகளைப் பதியும்போது அந்தந்த கட்டுரையுடன் பகிரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
குறிப்பு: பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் நடத்தவிருக்கும் கட்டுரைப்போட்டி பற்றிய அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியிடவிருப்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில் அறக்கட்டளை.

May 23, 2015

தமிழ்க்குடில் அறக்கட்டளை 4ஆம் ஆண்டு துவக்கம்.


தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்புவணக்கம்.  __/\__ :) :)

நம் தமிழ்க்குடில் அறக்கட்டளை துவங்கப்பட்டு (21.05.15) மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து  22.05.2015 அன்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.  தங்களின் தொடர்ந்த ஒத்துழைப்பிற்கும், இடைவிடாத ஊக்கத்திற்கும், பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றியினை நெகிழ்வுடன் நவில்கின்றோம். தமிழ்க்குடிலின் செயல்பாடுகள் தொடர்ந்திடவும், சிறப்பாக செயலாற்றிடவும் வெற்றிப்படிகளாக அமைந்துவருவது தாங்கள் எங்களுக்கு அளித்துவரும் நம்பிக்கையும் தங்களின் பங்களிப்பும் என்பதில் ஐயமில்லை.  தாயின் கரம்பிடித்து செல்லும் குழந்தையாய் தமிழ்க்குடில் தங்கள் கரங்கள் பற்றிச்செல்கிறது.  குன்றாத தாயன்பாய் தாங்கள் நம் தமிழ்க்குடில் மீது தொடர்ந்து காட்டிவரும் அன்பிற்கு மகிழ்ச்சியும் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.  தமிழ்க்குடிலின் மலர்த்தோட்டத்தில் பூத்திருக்கும் மலர்கள் தொடர்ந்து மணம்வீசி மனம் மகிழ்ந்திட வாழ்த்துகள்.  :) :) 

என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில் அறக்கட்டளை.

May 15, 2015

அன்னையர் தின கட்டுரைப்போட்டி - தமிழ்க்குடில் அறக்கட்டளை


அன்புத் தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்க்குடில் கவிதை, கட்டுரைப் போட்டிகளை நடத்திவருவது தாங்கள் அறிந்ததே.


2015 ஆம் ஆண்டிற்கான போட்டிகளில் முதல் கட்டமாக ”அன்னையர் தினத்தை” முன்னிட்டு பெண்களுக்கான கட்டுரை போட்டிகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

போட்டி: அன்னையர் தினம் - பெண்களுக்கு மட்டும். smile emoticon


தலைப்பு : அன்னையை முன்னிறுத்தி உங்களுக்கு விருப்பமான தலைப்பில் எழுதவும். தங்கள் சிந்தனைகள் குறிப்பிட்ட ஒரு தலைப்பில் சுறுங்(க்)கி விடாமலிருக்க தலைப்பினை தேர்வு செய்வதை தங்களிடமே வழங்கியிருக்கிறோம். smile emoticon


விதிமுறை: குறைந்தது 3 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.

படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 10.06.15 .

படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்படவேண்டும். குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.

படைப்புகள் வேர்டு ஆவணமாக அனுப்பவேண்டுகிறோம். லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து அனுப்பவேண்டுகிறோம். கவிதை எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.

போட்டி சம்பந்தமாக எழும் சந்தேகங்களை பதிவில் மட்டும் கேட்கும்படி வேண்டுகிறோம்.

முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.

முதல் பரிசு: ரூ.1500/- மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்

இரண்டாவது பரிசு: தமிழ்க்குடில் வழங்கும் சிறப்புப்பரிசு மற்றும் சான்றிதழ்

மூன்றாவது பரிசு: நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்.

இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.

நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக.
அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.


குறிப்பு. : இந்தப்பதிவை காணும் நண்பர்கள் தங்கள் நட்புகளிடத்தும் பகிர்ந்து அதிக எண்ணிக்கையிலான எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தவேண்டுகிறோம். போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம் எனவே தங்கள் நட்பு, சுற்றம் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்.

January 12, 2015

பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் - 2015

அன்புத்தோழமைகளுக்கு, 
தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள்.  

தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை நமது இளஞ்சிறார்களிடையே சென்றடையச்செய்து அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில், தமிழ்க்குடில் அறக்கட்டளை 2014 தமிழர் திருநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகளை நடத்தியது தாங்கள் அறிந்ததே. முதல் முயற்சியாக சென்ற ஆண்டு(2014) அரியலூர் மாவட்டம் சிலம்பூர் கிராமத்தில் போட்டிகளை நடத்திய தமிழ்க்குடில் அறக்கட்டளை  இந்த ஆண்டு அரியலூர் மாவட்டம் சிலம்பூர், ஆண்டிமடம் ஆகிய ஊர்களிலும், தஞ்சை மாவட்டம் புனல்வாசல் கிராமத்திலும் மற்றும் கோவை மாவட்டம் புதுக்காடு கிராமத்திலும் போட்டிகளை நடத்தவிருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்ற மாவட்டங்களிலும் இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம்.

 நடத்தபடும் விளையாட்டு போட்டிகள்: 
1.   உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள்
         ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கபடி

2.  மனப்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள்   
        கோலாட்டம், கும்மி, இசை நாற்காலி

3. அறிவுசார்ந்த விளையாட்டுகள்               
         சதுரங்கம், ஆடுபுலி ஆட்டம், கண்ணாமூச்சி 

4. ஞாபக சக்தி சார்ந்த விளையாட்டுகள்      
        நடித்துக்காட்டுதல், ஒப்புவித்தல், பொருட்களை அடையாளம்காணுதல்.

இது போன்ற தலைப்புகளில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை பிரித்துகொண்டு போட்டி நடத்தி பரிசும், சான்றிதழும் வழங்கி மாணவர்கள் சிறப்பிக்கப்படுவர். தங்களுடைய தொடர்ந்த ஒத்துழைப்பையும் ஆதரவையும் தமிழ்க்குடிலுக்கு  தந்து தமிழ்க்குடிலின் இப்பயணத்தில் தொடர்ந்து இணைந்திருக்க தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம். 

என்றென்றும் அன்புடன் தமிழ்க்குடில் நிர்வாகம்.

November 25, 2014

மகாகவி பாரதியின் 132 வது பிறந்தநாள் விழா போட்டி

மகாகவி பாரதியின் 132 வது பிறந்தநாள் விழா போட்டி 

அன்புத் தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கம். தாங்கள் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ”மகாகவி பாரதியின் பிறந்தநாளை” முன்னிட்டு ”தமிழ்க்குடில் அறக்கட்டளை  நடத்தும்” கவிதை, கட்டுரை, பெண்களுக்கான சிறப்பு கட்டுரை மற்றும் வரலாற்று கட்டுரை போட்டிகளின் விவரங்களைத் தங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தோழமைகள் அனைவரும் பெருமளவில் பங்குகொண்டு போட்டியினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.

கவிதை போட்டி:

1.   தலைப்பு : தாங்களே தங்களால் படைக்கப்படும் கவிதைக்குப் பெயரிட்டு அனுப்பலாம்.
2.   கவிதையின் தன்மை: தங்களால் எழுதப்படும் கவிதை எந்தவகையினைச் சார்ந்தது என குறிப்பிடவும். (உ.ம்) புதுக்கவிதை, மரபுக்கவிதை,
3.   20  வரிகளுக்குக் குறையாமலும் 50 வரிகளுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.
4.   கவிதை வேறு எந்த போட்டிக்கோ, இதழுக்கோ அனுப்பப்பட்டதாகவோ அல்லது வேறு எங்கும் பதிவிடப்பட்டதாகவோ இல்லாமல்,  தமிழ்க்குடிலின் இந்தப்போட்டிக்காக மட்டுமே பிரத்தியேகமாக எழுதப்பட்டவையாக இருக்கவேண்டும்.
5.   ஒரு கவிஞர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பவேண்டும்.
6.   உங்களுடைய சொந்த படைப்பாக இருக்கவேண்டும்.

கட்டுரைப் போட்டி:

1.   காமராசரை முதலமைச்சராக பெறாத தமிழ்நாடு…

2.   என் வாழ்வில் பெண் என்பவள். . .

3.   உலகியலில் தமிழர் நாகரீகம் ஓங்கியது எங்ஙனம்..?

4.   எனது பார்வையில் தொல்காப்பிய தமிழ்…

5.   உலகக்கலைகளும், பாரதக் கலைகளும்.(ஓர் ஒப்பீடு)

6.   தமிழகத்தில் அகத்தியலில் ஆணும், புறத்தியலில் பெண்ணும்.

7.   போபர்ஸ் முதல் அலைக்கற்றை வரை.

விதிமுறைகள்: 3 முதல் 10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
தமிழ்க்குடில் வழங்கிய தலைப்புகள் அல்லாது தங்களுக்கு விருப்பமான தலைப்பிலும் கட்டுரை எழுதலாம்.

சிறப்பு கட்டுரைப்போட்டி – பெண்களுக்கு மட்டும்

*** பெண்கள் மட்டும் பங்குகொள்ள வேண்டும்.***
தமிழ்க்குடில் வழங்கியிருக்கும் தலைப்புகளில் தங்கள் சிந்தனையில் 3 பக்கங்களுக்குக் குறையாது கட்டுரை வடித்து அனுப்பவும்.

1.   தாய்மை
2.   பெண்மை
3.   நான் படைக்க விரும்பும் சமூகம்
4.   உயிரியல் பரிணாமத்தில் பெண்பாலினத்தின் பங்கு.
5.   வயல் வெளியிலிருந்து வான்வெளி நோக்கி..(பெண்கள்)
6.   பெண் விரும்பும் ஆணின் பரிணாமம் - காதலன், கணவன், மகன்…?
7.   பாரதி தேடிய புதுமைப்பெண்ணாய் நான்
குறிப்பு: கவிதை, கட்டுரை மற்றும் பெண்களுக்கான சிறப்பு கட்டுரைகள் தமிழ்க்குடிலின் மின்னஞ்சலில் மட்டும் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வரலாற்று கட்டுரைப்போட்டி:

தென்னிந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு தொடர்புடைய தமிழனின் தொன்மையான வரலாற்றுச் சுவடுகளை உலகமெங்கும் அறியச்செய்யும்  எண்ணத்தில் இதுவரை வெளிவராத வரலாற்று உண்மைகளை வெளிக்கொணரும் ஒரு புதிய முயற்சி.

தாங்கள் வாழும் பகுதி அல்லது தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் கிடைக்கக்கூடிய அரிய தகவல்கள், அடையாளச்சின்னங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றை இணைத்து புகைப்படத்துடன் கூடிய கட்டுரையாக எழுதி அனுப்ப வேண்டுகிறோம்.

சங்ககாலம், மூவேந்தர் காலம் மற்றும் அதற்குப்பின்னான காலங்களில் செவிவழிச்செய்தி, கதைகள் மற்றும் வெளிக்கொணரப்படாத வரலாற்று உண்மைகள் சார்ந்த, ஏதேனும் ஒரு களத்தை எடுத்துக்கொண்டு இதுவரை வெளிவராத வரலாற்று உண்மைகளை அதற்கான சான்றுகளுடன் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முக்கியக்குறிப்பு: தாங்கள் திரட்டியனுப்புகிற தகவல்கள் ஏற்கனவே வெளிக்கொணரப்பட்ட தகவலாகவோ, இணையத்தில் கிடைக்கக்கூடிய தகவலாகவோ இருக்கும்பட்சத்தில் பரிசுக்கு தகுதியற்றதாக கருதப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

      படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 07.12.14
படைப்புகள் tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்படவேண்டும். குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது. முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்

போட்டியின் முடிவு பாரதியின் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும்.

பரிசு விவரங்கள்:
1.   வரலாற்று கட்டுரைப்போட்டி:
முதல் பரிசு:               ரூ.3000/- மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு: ரூ.1500/- மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்                              
மூன்றாவது பரிசு:        தமிழ்க்குடில் வழங்கும் சிறப்பு பரிசு மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்.

பரிசுத்தொகை என்பதை உங்கள் உழைப்பிற்கான எங்களுடைய சிறு அன்பளிப்பாக மட்டுமே கருதவேண்டுகிறோம்.  தங்களுடைய உழைப்பிற்கும், அறிவாற்றலுக்கும் முன்னால் இந்த பரிசுத்தொகை ஈடாகாது என்பதை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். ஆயினும், மறைந்துகிடக்கும் நம் வரலாறுகள் நம் மக்களிடையே சென்றடையவேண்டும் என்ற ஆர்வத்திலும், அக்கரையிலும் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம். இந்த முயற்சியில் உங்கள் அனைவரது முழு ஒத்துழைப்பும், பங்களிப்பும் இருந்தால் மட்டுமே நம் வரலாறுகளை மீட்டெடுக்கமுடியும்  என்கிற நம்பிக்கையை உங்கள் முன் வைக்கிறோம். நம் சமூகத்திற்கு நாம் செய்கிற சேவை என்கிற தார்மீக பொறுப்பின் அடிப்படையில்
வரலாற்று ஆய்வாளர்களும், வல்லுநர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரவேற்கிறோம்.

2.   கவிதைப்போட்டி:

முதல் பரிசு:          ரூ.1000/-  மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு:    தமிழ்க்குடில் வழங்கும் சிறப்பு பரிசு          
                          மற்றும் சான்றிதழ்
மூன்றாவது பரிசு:       நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்
3.   கட்டுரைப்போட்டி:
முதல் பரிசு:          ரூ.1000/-  மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு:    தமிழ்க்குடில் வழங்கும் சிறப்பு பரிசு                                   
                          மற்றும் சான்றிதழ்
மூன்றாவது பரிசு:       நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்
     
4.   பெண்கள் சிறப்புக்கட்டுரை
முதல் பரிசு:          ரூ.1500/-  மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு:    தமிழ்க்குடில் வழங்கும் சிறப்பு பரிசு                                  
                    மற்றும் சான்றிதழ்
மூன்றாவது பரிசு:       நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்.

இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.
நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக.
அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.