அன்புள்ளங்களுக்குத் தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பான வணக்கம்.
நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழ்க்குடில் அறக்கட்டளையால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் இணைய வசதியுடன் கூடிய பொதுநூலகத்தின் திறப்புவிழாவின் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். திறப்புவிழா வரும் செப்டம்பர் மாதம் 09-09-2013 அன்று நடைபெறவிருக்கிறது.
விழாத்தலைவர் : உயர்திரு.நீதிபதி.ப.வு.செம்மல் B.A.,LL.M.அவர்கள். சிறப்பு நீதிபதி. தனி நீதிமன்றம்,
ஜெயங்கொண்டம்.
நூலகத் திறப்பாளர்: பேராசிரியர் திரு.க.இராமசாமி அவர்கள், முதுநிலை ஆய்வறிஞர், செம்மொழி
தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.
தமிழ்க்குடில்
அலுவலகம் திறப்பாளர்: எழுத்தாளர் திரு.இமயம் அவர்கள்.
தமிழ்க்குடில்
ஆண்டு அறிக்கை வெளியிடுபவர்: விழாத்தலைவர் அவர்கள்.
விழா துணைத்தலைவர் : திரு.இரா.இளையபெருமாள், சிலம்பூர் ஊராட்சி மன்றத்தலைவர்.
விழா நிகழ்விடம்: தமிழ்க்குடில் அறக்கட்டளை, சிலம்பூர், அரியலூர் மாவட்டம்.
நூலகத்திறப்புவிழாவிற்கு தாங்கள், தங்கள் குடும்பம் மற்றும் நட்புடன் வருகை தந்து விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். நூலகத்திறப்பு விழாவின் அழைப்பிதழ் விரைவில் பகிரப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ்க்குடில் அறக்கட்டளையின் பொதுநூலகமும், அலுவலகமும் அமைவதற்கு உறுதுணையாக இருந்து தமது பங்களிப்பை வழங்கிய அனைத்துத் தோழமைகளுக்கும் தமிழ்க்குடில் தமது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. தங்களது தொடர்ந்த ஆதரவினையும், பங்களிப்பையும் தமிழ்க்குடிலுக்கு வழங்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.
அன்புடன்
தமிழ்க்குடில் அறக்கட்டளையின் அறங்காவலர்கள்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!! வெல்க தமிழ்!!!
விழா சிறக்க வாழ்த்துக்கள்....
ReplyDeleteதங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி..:)
Delete