August 31, 2013

”தமிழ்க்குடில் அறக்கட்டளை பொதுநூலக திறப்புவிழா” - அழைப்பிதழ்

தமிழ்க்குடில் குடும்ப உறுப்பினர்களுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பான வணக்கம்.
 
தமிழ்க்குடில் அறக்கட்டளையால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் இணைய வசதியுடன் கூடிய பொதுநூலக திறப்புவிழாவின் அழைப்பிதழ் தங்கள் அனைவருடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மாதம் 09-09-2013 அன்று அரியலூர் மாவட்டம், சிலம்பூரில் நடக்கவிருக்கும் நம் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் பொதுநூலகத்திறப்பு விழாவிற்கு தாங்கள் தங்கள் குடும்பம் மற்றும் நட்புடன் வருகை தந்து கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம். இந்த அழைப்பிதழையே தங்களுக்கு தமிழ்க்குடில் நிர்வாகம் அனுப்பிவைத்திருக்கும் தனித்த அழைப்பாக ஏற்றுக்கொண்டு, விழாவிற்கு வருகை புரிந்து நூலகதிறப்பு விழாவினை சிறப்புடன் நடத்திக்கொடுக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம். 
தமிழ்க்குடிலின் நூலகம் மற்றும் அலுவலகம் அமைவதற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்துவரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும், நூல்கள் சேகரிப்பதில் தமது பங்களிப்பையும் நேரம் மற்றும் உடல் உழைப்பையும் கொடுத்துவரும் தோழமைகளுக்கும் தமிழ்க்குடில் தமது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. தங்களது தொடர்ந்த ஆதரவினையும், பங்களிப்பையும் தமிழ்க்குடிலுக்கு வழங்கும்படி வேண்டிக் கொள்கிறோம். 

அன்புடன்
தமிழ்க்குடில் அறக்கட்டளையின் அறங்காவலர்கள்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!! வெல்க தமிழ்!!!

5 comments:

  1. வணக்கம்

    தங்களைப் பற்றி இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கிறேன்... நேரமிருக்கும் போது வந்து வாசியுங்கள்...

    அதற்கான சுட்டி இதோ..

    http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_974.html

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி...அவசியம் பார்வையிடுகிறோம்..அறிமுகத்திற்கு நன்றி..:)

      Delete

  2. தோழர் தமிழ்க்காதலன்,
    தோழி அனிதா ராஜ், மற்றும்
    தோழி காயத்ரி வைத்யநாதன்
    இவர்கள் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் தொடங்கிய
    பொதுச்சேவையின் பயணத்தில்
    தமிழ்க்குடில், மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையும் சிறப்புடன் நடைபெற்றுக்கொண்டிருப்பதை நான் நன்கு அறிவேன்.
    இதன் தொடர்ச்சியாக இம்மூவரின் விடா முயற்சியாலும், அயராத உழைப்பினாலும், வினாயகர் சதுர்தி தினமான இன்று (09-09-2013) இணைய வசதியுடன் கூடிய
    "தமிழ்க்குடில் பொதுநூலகம்" துவங்கப்பட்டிருப்பது.
    மேலும் மேலும் மகிழ்ச்சி தரும் விசயமாக உள்ளது.

    என்னை வியப்பில் ஆழ்த்திய
    இவர்களின் பொதுச்சேவை மனப்பாண்மைக்கும்,
    பொதுநலச்சேவைக்காக சற்றும் அயராது பயணித்துக்கொண்டிருக்கும் இவர்களின் தொடர் பயணத்திற்கும்,
    எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    தமிழுக்கெனவும் தமிழருக்கெனவும் இவர்கள் தொடங்கியிருக்கும் இந்த சேவைப்பயணத்தில் இன்னும் பலபல புதுமைகளை படைத்திடவும்,
    இவர்களால் படைக்கப்படும் புதுமைகளினால் உலகெங்கிலுமுள்ள தமிழ் உள்ளங்கள் யாவரும் பயன்பெற்றிடவேண்டுமெனவும் வாழ்த்துகிறேன்.

    இப்படிக்கு
    என்றென்றும் நட்புடன்
    ஆனந்த்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றியும் மகிழ்ச்சியும் ஆனந்த். தங்களைப்போன்ற அன்புள்ளங்கள் பயணிப்பதால் நம் சேவைப்பயணம் இனிதே அமையும்..நன்றி.._/\_

      Delete

  3. தோழர் தமிழ்க்காதலன்,
    தோழி அனிதா ராஜ், மற்றும்
    தோழி காயத்ரி வைத்யநாதன்
    இவர்கள் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் தொடங்கிய
    பொதுச்சேவையின் பயணத்தில்
    தமிழ்க்குடில், மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையும் சிறப்புடன் நடைபெற்றுக்கொண்டிருப்பதை நான் நன்கு அறிவேன்.
    இதன் தொடர்ச்சியாக இம்மூவரின் விடா முயற்சியாலும், அயராத உழைப்பினாலும், வினாயகர் சதுர்தி தினமான இன்று (09-09-2013) இணைய வசதியுடன் கூடிய
    "தமிழ்க்குடில் பொதுநூலகம்" துவங்கப்பட்டிருப்பது.
    மேலும் மேலும் மகிழ்ச்சி தரும் விசயமாக உள்ளது.

    என்னை வியப்பில் ஆழ்த்திய
    இவர்களின் பொதுச்சேவை மனப்பாண்மைக்கும்,
    பொதுநலச்சேவைக்காக சற்றும் அயராது பயணித்துக்கொண்டிருக்கும் இவர்களின் தொடர் பயணத்திற்கும்,
    எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    தமிழுக்கெனவும் தமிழருக்கெனவும் இவர்கள் தொடங்கியிருக்கும் இந்த சேவைப்பயணத்தில் இன்னும் பலபல புதுமைகளை படைத்திடவும்,
    இவர்களால் படைக்கப்படும் புதுமைகளினால் உலகெங்கிலுமுள்ள தமிழ் உள்ளங்கள் யாவரும் பயன்பெற்றிடவேண்டுமெனவும் வாழ்த்துகிறேன்.

    இப்படிக்கு
    என்றென்றும் நட்புடன்
    ஆனந்த்

    ReplyDelete

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_