February 10, 2016

மகாகவி பாரதியின் பிறந்ததின கவிதைப்போட்டி முடிவுகள்

அன்புள்ளங்களுக்கு,
தமிழ்க்குடில் அறக்கட்டளை நிர்வாகியின் அன்பு வணக்கம்.
மகாகவி பாரதியின் பிறந்ததின கவிதைப்போட்டி பரிசு பெற்றவர்கள் விவரம்
டிசம்பர் மாதம்’2015 மகாகவி பாரதியாரின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்திய கவிதைப் போட்டியின் முடிவுகளை தங்களிடம் பகிர்வதில் மகிழ்வடைகிறோம்.
போட்டியில் பங்குகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்துக்கொள்கிறோம். வெற்றிபெற்றவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை நடுவர்கள் சார்பாகவும், நிர்வாகத்தின் சார்பாகவும், நம் தமிழ்க்குடில் அங்கத்தினர்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறோம்.
போட்டிகளின் வெற்றியாளர்களைத் தேர்வு செய்த நடுவர்களைப்பற்றி தங்களுக்காக சிலவரிகள்.
கலைமகள் ஆசிரியர் உயர்திரு. கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள் மற்றும் சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு. முத்துவேல் அவர்கள் இருவரும் தங்களது சமூகப்பணி மற்றும் தமிழ்ப்பணிகளுக்கிடையில் நம் தமிழ்க்குடிலின் வேண்டுகோளை ஏற்று சிறந்த பரிசுக்குரிய படைப்புகளைத் தேர்வு செய்து கொடுத்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றியினை நிர்வாகம் சார்பாகவும் உங்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்வதோடு தொடர்ந்த நம் பயணத்தில் தங்களது தொடர்ந்த ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டுகிறோம்.
கவிதைப்போட்டிமுதல் பரிசு : திரு. கருமலைத்தமிழாழன், ஓசூர்.தலைப்பு : கனவை நனவாக்குவோம்.
இரண்டாம் பரிசு : திரு. ந. ஜெயபாலன், திருநெல்வேலிதலைப்பு : மனிதம் மலர்ந்த்து.
மூன்றாம் பரிசு : நாகினி, மதுரைதலைப்பு : முயற்சி எனும் கவின்
போட்டியில் பங்குகொண்டவர்களுக்கும், வெற்றிபெற்றவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ்க்குடிலின் தொடர்ந்த செயல்பாடுகளில் தங்களை இணைத்துக்கொண்டு தங்கள் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் வழங்கிட வேண்டுகிறோம்.
குறிப்பு: அன்னையர் தின கட்டுரைப்போட்டி மற்றும் மறைமலை அடிகள் சொற்பொழிவு போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டுவிட்ட்து என்பதையும், திரு காமராஜர் பிறந்த்தின கட்டுரைப்போட்டி மற்றும் மகாகவியின் பிறந்த்தின கவிதைப்போட்டிக்கான பரிசளிப்பு விவரம் விரைவில் தெரியப்படுத்தவிருக்கிறோம். நன்றி
என்றென்றும் அன்புடன் தமிழ்க்குடில். :)

No comments:

Post a Comment

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_