July 27, 2015

இந்த நூற்றாண்டு நாயகன் திரு.அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி

திரு.அப்துல்கலாம் அவர்களின் இழப்பு நம் நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு. இந்த நூற்றாண்டின் மாபெரும் தலைவன் திரு. அப்துல்கலாம் அவர்களை இழந்துவிட்ட நம் அனைவரது வருத்தம் ஈடுசெய்யமுடியாதது.
அனைவராலும் நேசிக்கப்ப(ட்ட)டும் அற்புத மனிதர். கலாமைச் சுமந்ததினால் பூமகளையும் பூரிப்படையச் செய்த தலைவன். உலகமே பிரமிப்புடன் கண்டுவியக்க இளைஞர்களை அற்புத சிற்பமாய் செதுக்கும் உளியாக இருந்த தலைவன். தன் அக்கினிச்சிறகினால் மனத்தோட்டத்தில் நம்பிக்கை விதைகளை விதைத்த அற்புதன்.
தென்கோடியில் பிறந்து வடகோடியில் உயிர்த்துறந்து வடக்கிலிருந்து தெற்குநோக்கி இறுதிபயணம் மேற்கொள்ளும் இந்தத்தலைவனைப்போல் இதுவரைக் கண்டதில்லை இந்த நூற்றாண்டு.
இயற்கைக்கு சவாலாய் அனைவருக்கும் பிடித்தவராய் அனைத்து மதத்தினரும் போற்றும் நல்லதொரு நாயகனாய் விளங்கி, இன்னல்களைக் கடந்தும் நெறிதவறாது வாழ்ந்துகாட்டிய அவர் வழி பயணிக்கும் இளைஞர்களின் உருவத்தில் நாம் நம் கலாம் அவர்களை மீண்டும் காணலாம் என்ற எதிர்பார்ப்போடு அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மன பலத்தையும், எதிர்கால இந்தியா இளைஞர்களிடத்தில் என்றவரின் கூற்றை நினைவாக்கும் விதத்தில் எண்ணற்ற கலாம்களை எதிர்நோக்கியபடியே மனம்முழுவதும் துயரம் தாங்கி அவருக்கு நீங்கா விடையளித்து அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம். frown emoticon frown emoticon __/|\__
துயரத்துடன் தமிழ்க்குடில் குடும்பம்

1 comment:

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_