December 20, 2015

நன்றி - கடலூர் களப்பணிக்கு உதவிக்கரம் நீட்டிய நல்லுங்களுக்கு

அன்புத்தோழமைகளுக்கு,

இயற்கையின் விளையாட்டில் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்காக நம்மால் இயன்ற அளவு உதவிசெய்திட எண்ணிய தமிழ்க்குடில், முதல் கட்டமாக கடலூர் மக்களுக்கு நம் கரங்களை நீட்டிட எண்ணி,  நம்தமிழ்க்குடில் குழு 03.12.15 அன்று தன் பயணத்தைத் துவங்கியது.  கடலூர் மாவட்டம் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும்வகையில் அவர்களை சந்தித்து தேவையான உதவிகளை செய்தது நம் அறக்கட்டளை வழங்கியது.






                                                                                                                                                  இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கருணையோடு தங்களால் வழங்கப்பட்ட பொருட்களும், நன்கொடையும் உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்றதில் மனம்நெகிழ்ந்த நன்றியையும்,  மகிழ்ச்சியையும் பயனடைந்த மக்களின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்ட கிராமங்கள்.

1.   ஆடூர், 2. நத்தமலை, 3. திருச்சின்னபுரம், 4. கொள்ளுமேடு, 5. இராயநல்லூர்,
6. கந்தகுமாரன், 7. கூத்தங்குடி, 8. உத்தமசோழகம், 9. வெள்ளிக்குடி,
10. மெய்யனூர், 11.தெ. விருத்தாங்கநல்லூர், 12.வ. விருத்தாங்கநல்லூர்
13.கூழப்பாடி, 14.ஓடகூர், 15.வாழக்கொல்லை, 16.பூலாப்பாடி, 17.சிறகிழந்தநல்லூர், 18. திருநாரையூர். 19. நெடுஞ்சேரி. 20. சர்வராஜன்பேட்டை, 21.நெல்லிக்குப்பம், 22. சோழவெளி, 23.திடீர்குப்பம், 24.திருக்கண்டேஸ்வரம், 25.தமிழ்குச்சிப்பாளையம்

வழங்கப்பட்ட பொருட்கள்:

போர்வை, பாய், உடைகள், அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு, மருந்து, பால்பவுடர்,  கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பிஸ்கட், பிரெட், நீர், உணவு ஆகிய பொருட்கள் அவரவர் தேவையறிந்து வழங்கப்பட்டன

மனதை அழுத்திக் கொண்டிருக்கும் வலிகளுக்கிடையே ஏற்பட்ட சின்ன மனநிறைவு‬
smile emoticon
கடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மக்கள் பணிகளுக்கு இடையே நாம் செய்த மற்றொரு பணியும் இருக்கிறது.  ஆங்காங்கே கைகட்டி, ஏரிக்கரை, குளக்கரை, கோயில் வாசல், ஆற்றுப் பாலம், என கிடைத்த இடத்தில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்த உள்ளூர் இளைஞர்களை எல்லாம் ஒன்று திரட்டி, அவர்களின் பிரச்சனைகளையும், தேவைகளையும், அதற்கான தேடல்களையும், ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளையும் சொல்லி, அவர்கள் சும்மா இருக்க, வெளியூர்களில் இருந்து வரும் மற்றவர்கள் களப்பணியில் ஈடுபடுவதைப் பார்க்க உங்களுக்கு உறுத்தலாக இல்லையா என்று வினாத்தொடுத்து, நாம் சென்ற அனைத்துப் பகுதிகளிலும் நமது இளைஞர்களை களப்பணியில் இறக்கி அவர்களுக்கும் சமூக அக்கறையை ஊட்டி இருக்கிறோம். இந்த பணி ஓரளவு எமக்கு நிறைவைத் தந்திருக்கிறது.

மருத்துவ உதவி, பொருளதவி நிதியுதவி அளித்த அனைத்து தோழமைகளுக்கும் உளமார்ந்த மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறோம்

இத்துடன் சில புகைப்படங்கள் தங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம். பொருட்கள் வழங்கும் சமயம் மாலை, இரவு வேலையென்பதாலும் மற்றும் அங்குள்ள சூழல்கண்டு புகைப்படம் எடுக்கும் மனநிலை இல்லாததாலும் புகைப்படங்கள் அதிகம் எடுக்க இயலவில்லை.

சமயத்தில் கிடைத்த தங்களின் இந்த பங்களிப்பு நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் அடங்கிவிடாது.  எனினும், மக்களின் தேவையறிந்து உரிய நேரத்தில் வழங்கப்பட்ட உதவிக்கு,. தங்களுக்கும் தங்களோடு இச்சேவையில் கரம் கோர்த்த அனைத்து நட்புகளுக்கும் தமிழ்க்குடிலின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.  


கடலூர் களப்பணியில் தமிழ்க்குடில் நிர்வாகி தோழர்
@ThamizhkKaathalan Thamizhkkaathalan​   அவர்களுடன் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்ட அன்புத்தம்பி @பிரியன் கண்ணன்,  தம்பி Mahendiran Mahe​ , உடன் களப்பணியாற்றிய உள்ளூர் தன்னார்வளர்கள் மற்றும் நண்பர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளும், உளமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்க்குடிலின் கடலூரின் களப்பணி இத்துடன் நின்றுவிடவில்லை என்பதையும், அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்துமுடிக்கும்வரை நம் பணிகள் தொடரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.  எங்களின் நம்பிக்கையான செயல்பாட்டிற்குத் தங்களின் தொடர்ந்த ஊக்கமே காரணம். தமிழ்க்குடிலின் சேவையில் கரம்கோர்த்து நம் செயல்பாடுகள் சிறப்படைய தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம்.

என்றென்றும் அன்புடன்
தமிழ்க்குடில் :)

4 comments:

  1. மனம் நிறைந்த வாழ்த்துகள்
    மதம் மறந்து மனிதம் வளர்ப்போம்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete
    Replies
    1. சகோதரரின் வாழ்த்திற்கும், வருகைக்கும் நன்றியும், மகிழ்ச்சியும். நிச்சயம் மனிதம் தழைக்க கரம் கோர்ப்போம். :)

      Delete
  2. It is important to make people realize that they can help themselves in most cases instead of waiting for others to come. This part of your work is the most rewarding. Sometimes it is not possible, outside help is definitely needed. I have seen in the news - village people blocking traffic for water flooding in their area, if they made some attempt they could have cleared themselves. Civic sense is lacking and they look for Govt to solve everything and expecting free stuff. Sorry state of affairs in TN.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :)

      Delete

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_