அன்புத்தோழமைகளுக்கு,
மதுராந்தகத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடந்த மஹாகவி பாரதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான பேச்சுப்போட்டி மற்றும் கவிதைப் போட்டிக்கு, நமது தமிழ்க்குடிலைச் சார்ந்த கவிஞர் கவிஞர்.திரு.தமிழ்க்காதலன் மற்றும் கவிஞர்.தமிழ் கனல் அவர்கள் இருவரும் நடுவர்களாக பங்கேற்று விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் அறிஞர்களின் அறிமுகமும், ஆதரவும் கண்டு மகிழ்ந்தோம். இந்த வாய்ப்பை நமக்கு வழங்கிய கல்லூரி நிர்வாகத்திற்கு தமிழ்க்குடில் தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
அன்புடன் தமிழ்க்குடில் நிர்வாகம்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!! வெல்க தமிழ்!!!
No comments:
Post a Comment
தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_