அன்பு சொந்தங்களுக்கு,
அறக்கட்டளை துவங்கியது முதல் இதுவரை 58 குழந்தைகளின் கல்விக்கு உதவிய தமிழ்குடில் அறக்கட்டளை தனது சேவைப்பயணத்தில் மற்றுமொரு உதவியாக உண்ணாமலை பொறியியற் கல்லூரி கோவில்பட்டியில் நான்காம் ஆண்டு படித்துவரும் மதுரையைச் சார்ந்த செல்வி.எஸ்.ஜெயசீலி என்ற மாணவிக்கு படிப்பிற்கான கட்டணத்தொகையாக ரூ.11800/-க்கான (பதினோராயிரத்து எண்ணூறு ரூபாய்) காசோலையை அவரது கல்லூரிக்கு 15/10/12 அனுப்பி வைத்தது. (மாணவியின் நலன் கருதி, அவரின் புகைப்படம் பகிரப்படவில்லை)
நமது அறக்கட்டளை தனது நோக்கங்களை நிறைவேற்ற கரம் கோர்த்துவரும் அனைத்துத் தோழமைகளுக்கும் தமிழ்க்குடில் தமது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிக்கிறது. தங்களுடைய தொடர்ந்த ஆதரவினை தமிழ்க்குடிலுக்கு வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன் தமிழ்க்குடில் நிர்வாகம்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!!! வெல்க தமிழ்!!!
No comments:
Post a Comment
தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_