September 25, 2016

மறைமலை அடிகளாரின் 140வது பிறந்தநாள் கவிதைப்போட்டி முடிவுகள்


தவத்திரு மறைமலை அடிகளாரின் 140 வது பிறந்த நாளை (15 ஜூலை) முன்னிட்டு அவரின் தமிழ்த்தொண்டை நினைவுகூரும் வகையில் “தமிழ்க்குடில் அறக்கட்டளை” நடத்திய (ஒலிவடிவ) கவிதைப் போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்
முடிவுகள் அறியும் முன்பு, தங்களுடைய வாழ்க்கைப்பணி, தமிழ்ப்பணி என பல பணிகளுக்கு நடுவில், தங்களுடைய சிரமம் கருதாமல் நம் தமிழ்க்குடிலுக்காக நேரம் ஒதுக்கி, பரிசுக்குரிய சிறந்த கவிதைகளைத் தேர்வு செய்து கொடுத்த நடுவர்கள் பற்றிய சிறு அறிமுகம் தங்களுக்காக.
நடுவர்களுக்கு தமிழ்க்குடில் குடும்ப உறுப்பினர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் நிர்வாகம் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
1. முனைவர் ப. தாமரைக்கண்ணன்: இணைப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி. தமிழ்ப்பணியில் 19 வருடகால அனுபவம் மிக்கவர். ஈழத்தமிழறிஞர் சி. வை. தாமோதரம் பிள்ளை, தாமோதரம் பதிப்புரைகளின் தொகுப்பு மற்றும் இருபத்துக்குமேலான ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். அருந்தமிழ் ஆய்வுரைச் செல்வர் விருதைப் பெற்றவர். தமிழ் இலக்கணத்தில் புலமை கொண்டவர். இலக்கண கருத்தரங்குகள்
2. முனைவர் நா. சங்கரராமன்: தமிழ்த்துறை, எஸ்.எஸ்.எம். கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியர். 11 கால ஆண்டு பேராசிரியர் பணியில் அனுபமிக்கவர். தமிழ் மரபு அறக்கட்டளை என்ற உலகளாவ்ய அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கான மாநில விருது, பல்கலைக்கழக விருது பெற்றவர். எஸ்.எஸ்.எம்.பண்பலையின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்.
3. திரு. அமிர்தம்சூர்யா: அமிர்தம் என்ற பெயரில் சிற்றிதழ் தொடங்கி ஆசிரியர் பொறுப்பில் சில ஆண்டுகள் நடத்தியதால் அமிர்தம் சூர்யாவாக அறியப்பட்டவர். கவிதை,சிறுகதை, நாடகம், ஓவியம், விமர்சனம், என பல்துறையில் இயங்கி தனக்கென தனித்துவத்தைப் பெற்ற இவர் கல்கி வார இதழின் தலைமை உதவி ஆசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை, பகுதி நேர கடவுளின் நாட்குறிப்பேடு வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் என மூன்று கவிதை தொகுப்புகளும், முக்கோணத்தின் நாலாவது பக்கம் என்ற கட்டுரைத்தொகுப்பு மற்றும் கடவுளை கண்டுபிடிப்பவன் சிறுகதை தொகுப்பு என்ற 5 நூல்களுக்கு சொந்தக்காரர் அமிர்தம் சூர்யா. திருப்பூர் தமிழ் சங்க விருது, தினகரன் பரிசு, ஸ்டேட் பாங்க் அவார்ட் விருது, எழுச்சி அறக்கட்டளை விருது, சி.கனகசபாபதி விருது, இலக்கிய வீதி வழங்கிய அன்னம் விருது என தனது இலக்கிய இருத்தலுக்கு பல அங்கீகாரம் பெற்றவர் அமிர்தம் சூர்யா
நம் நடுவர்களைப் பற்றிக் குறிப்பிட எண்ணற்ற விசயங்கள் இன்னும் இருப்பினும், போட்டி முடிவுகளை அறியக் காத்திருக்கும் தங்களின் ஆர்வத்தை அறிந்து நடுவர்கள் பற்றிய அறிமுகத்தை சிறிதளவே வழங்கியுள்ளோம். நடுவர்களுக்கு மீண்டும் உங்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதோடு போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விவரங்கள் தங்கள் பார்வைக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
முதல் பரிசு : Dr. சலீம் அக்பர், திண்டுக்கல்
இரண்டாம் பரிசு : சி.கணேசன் (எ) கவிநேசன், கோபிச்செட்டி பாளையம்
மூன்றாம் பரிசு : பாவலர். கருமலைத்தமிழாழன்
வெற்றி பெற்ற அனைவருக்கும் தமிழ்க்குடில் சார்பாகவும், நடுவர்கள் சார்பாகவும் மனமார்ந்த நல்வாழ்த்துகளை நடுவர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்க்குடிலின் செயல்பாடுகளில் தொடர்ந்து கரம்கோர்த்துப் பயணிக்க வேண்டுகிறோம்.
என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில் அறக்கட்டளை. 

No comments:

Post a Comment

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_