November 03, 2015

ஆண்டு அறிக்கை 2014-2015

ஆண்டு அறிக்கை 2014-2015


தமிழ்க்குடில் அறக்கட்டளையின் (2014-2015) ஆண்டு நிதியறிக்கை:

தமிழ்க்குடில் அறக்கட்டளையின் மூன்றாமாண்டு அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்நம் தமிழ்க்குடிலின் தொடர்ந்த பயணத்தில், முழுமையான ஒத்துழைப்பு வழங்கியும், உற்சாகமூட்டியும் நட்புகள் வழங்கிவரும் பேராதரவுடன் குடில் தனது பயணத்தில் அடுத்தகட்ட அறப்பணியை நோக்கி நம்பிக்கையுடன் பயணிக்கிறது என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். நம்முடைய அனைத்து முயற்சிகளுக்கும் தேவையான உதவிகளை எந்த நேரத்திலும் சிரமம் பாராமல் வழங்கிக்கொண்டிருக்கும்  அன்புத்தோழமைகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை நவில்கின்றோம்தமிழ்க்குடில் சிறப்பாக செயலாற்றிட அடிப்படையாக தோழமைகளின் அயராத உழைப்பும், பங்களிப்பும், ஒத்துழைப்பும் மட்டுமே பேருதவியாக இருக்கிறது என்பதை மட்டற்ற பெருமகிழ்வுடனும், நன்றியுடனும் தெரிவித்துக்கொள்கிறோம்

அறப்பணியில் தமிழ்க்குடில்:

இயற்கை விவசாயம்:

இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வை இளைய தலைமுறைகளிடத்தில் சென்றடையச் செய்வதற்காக விழிப்புணர்வு கருத்தரங்கை ஏப்ரல்’2014 சிலம்பூர் கிராமத்தில் தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தியது.  

கட்டுரை மற்றும் கவிதைப்போட்டிகள்:

*                   2014 மே மாதம்                  - அன்னையர் தினத்தை முன்னிட்டு 
                                                        பெண்களுக்கான சிறப்பு கட்டுரை போட்டி

*                   2014 ஜூலை மாதம்            - காமராஜர் அவர்களின் பிறந்தநாளை   
                                                         முன்னிட்டு கட்டுரை போட்டி

*                   2014 டிசம்பர் மாதம்            - மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாளை  
                                                       முன்னிட்டு கவிதைபோட்டி நடத்தப்பட்டது.

போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த முதல் மூன்று படைப்பாளிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. முதல் பரிசாக ரொக்கப்பரிசுடன் சான்றிதழ் இரண்டாம் பரிசாக தமிழ்க்குடிலின் நினைவுப்பரிசுடன் சான்றிதழும், மூன்றாம் பரிசாக நூலுடன் சான்றிதழும் வழங்கப்பட்டது.

தமிழரின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள்: 

மண்ணின் பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக   தமிழரின் பாரம்பரியவிளையாட்டுப் போட்டிகளைத் தமிழ்க்குடில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்திவருகிறது

2015 ஆம் ஆண்டு தமிழர் திருநாளையொட்டி விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்ட விவரங்கள்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் மார்ட்டினார் ஆங்கிலவழி தனியார் நடுநிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவர்களுக்கு 14.01.15 அன்று போட்டிகள் நடத்தப்பட்டு 75 பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டம் புதுக்காடு கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 16.01.15 அன்று போட்டிகள் நடத்தப்பட்டு (17.01.15) அன்று 31 பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

தஞ்சை மாவட்டம் புனல்வாசல் கிராமத்தில்  17.01.15 அன்று போட்டிகள் நடத்தப்பட்டு 26.01.15 அன்று தமிழ்க்குடில் சார்பாக 38 பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  

தஞ்சை மாவட்டம்: தஞ்சை மாவட்டம், பாலத்தளி கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் முப்பெரும் விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு, விளையாட்டுப்போட்டிகள், இலக்கியபோட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்க்குடில் அறக்கட்டளை 56 பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கியது.

நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகள்: 
1. உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள் - ஓட்டப்பந்தயம், நீளம்   தாண்டுதல்,கபடி.
2. மனப்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள் - கோலாட்டம், கும்மி, இசை   நாற்காலி.
3. அறிவுசார்ந்த விளையாட்டுகள் - சதுரங்கம், ஆடுபுலி ஆட்டம்,கண்ணாமூச்சி. 
4. ஞாபக சக்தி சார்ந்த விளையாட்டுகள் - நடித்துக்காட்டுதல், ஒப்புவித்தல்,பொருட்களை அடையாளம் காணுதல்.


தமிழ்க்குடில் அறக்கட்டளையின் (2014-2015) ஆண்டு நிதியறிக்கை:

                                      தமிழ்க்குடில் அறக்கட்டளை


                 2014 - 2015 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை விகித அறிக்கை


. எண்

விவரங்கள்
ரூ.
செலவு விகிதம் 100%
1
ஓராண்டு உள்வரவுகள்



ரொக்க இருப்பு:
கையிருப்பு: 1402.03
வங்கி இருப்பு: 44463.45

45865.48


நன்கொடை உள்வரவு
42701.00


கடன் ரொக்க உள்வரவு
1850.00


தொண்டு முதல் நிதி
0.00



90416.48






ஓராண்டு செலவுகள்
54578.02
60.36%




                 
                        உட்பிரிவுகளின் அடிப்படையில் விகிதம்







எழுதுபொருள் செலவுகள்
1025.00
1.88%

அஞ்சலகச்செலவுகள்
455.00
0.83%

பயணச்செலவுகள்
2696.00
4.94%

பணியாளர் நலன் செலவுகள்
1707.00
3.13%

சேவைக்கட்டணம்
3371.00
6.18%

அறப்பணி செலவுகள்
19580.00
35.88%

எரிபொருள்
200.00
0.37%

இதர செலவுகள்
4050.00
7.42%

மின்சாதனப்பொருட்கள்
2750.00
5.04%

வாடகை
300.00
0.55%

வங்கிக்கட்டணம்
920.02
1.69%

காயத்ரிக்கு கடன் திருப்பி செலுத்திய விதத்தில்
10024.00
18.37%

திரு.ரமேசுக்கு கடன் திருப்பி செலுத்திய விதத்தில்
7500.00
13.74%


54578.02
100.00%

ஆண்டு இறுதி கையிருப்பு



ரொக்கம் கையிருப்பு
2745.03


வங்கி இருப்பு
33093.43




   35838.46






இடம்: சிலம்பூர்                                                                                                                           
தேதி:   15.09.15                                                                                               





நன்றியுரை:

தமிழ்க்குடிலின் செயல்பாடுகளில் தங்களை இணைத்துக்கொண்டு தொடர்ந்து எங்களுடன் பயணிக்கும் நல்லிதயம் கொண்ட தோழமைகளுக்கும், இயன்ற பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் நல்கி நமது இலட்சியப் பயணத்துக்கு உறுதுணையாக இருந்து வரும் அன்பு உள்ளங்களுக்கும் தமிழ்க்குடிலின் சார்பில்
அறங்காவலர்களின் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
தொடரும் ஆண்டுகளிலும் உங்களின் நட்பும், ஆதரவும் நமது சமூகத்தை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறோம்.


தமிழ்க்குடில் அறக்கட்டளைக்காக,

நிர்வாகிகள்.



No comments:

Post a Comment

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_