January 12, 2015

பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் - 2015

அன்புத்தோழமைகளுக்கு, 
தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள்.  

தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை நமது இளஞ்சிறார்களிடையே சென்றடையச்செய்து அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில், தமிழ்க்குடில் அறக்கட்டளை 2014 தமிழர் திருநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகளை நடத்தியது தாங்கள் அறிந்ததே. முதல் முயற்சியாக சென்ற ஆண்டு(2014) அரியலூர் மாவட்டம் சிலம்பூர் கிராமத்தில் போட்டிகளை நடத்திய தமிழ்க்குடில் அறக்கட்டளை  இந்த ஆண்டு அரியலூர் மாவட்டம் சிலம்பூர், ஆண்டிமடம் ஆகிய ஊர்களிலும், தஞ்சை மாவட்டம் புனல்வாசல் கிராமத்திலும் மற்றும் கோவை மாவட்டம் புதுக்காடு கிராமத்திலும் போட்டிகளை நடத்தவிருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்ற மாவட்டங்களிலும் இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம்.

 நடத்தபடும் விளையாட்டு போட்டிகள்: 
1.   உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள்
         ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கபடி

2.  மனப்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள்   
        கோலாட்டம், கும்மி, இசை நாற்காலி

3. அறிவுசார்ந்த விளையாட்டுகள்               
         சதுரங்கம், ஆடுபுலி ஆட்டம், கண்ணாமூச்சி 

4. ஞாபக சக்தி சார்ந்த விளையாட்டுகள்      
        நடித்துக்காட்டுதல், ஒப்புவித்தல், பொருட்களை அடையாளம்காணுதல்.

இது போன்ற தலைப்புகளில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை பிரித்துகொண்டு போட்டி நடத்தி பரிசும், சான்றிதழும் வழங்கி மாணவர்கள் சிறப்பிக்கப்படுவர். தங்களுடைய தொடர்ந்த ஒத்துழைப்பையும் ஆதரவையும் தமிழ்க்குடிலுக்கு  தந்து தமிழ்க்குடிலின் இப்பயணத்தில் தொடர்ந்து இணைந்திருக்க தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம். 

என்றென்றும் அன்புடன் தமிழ்க்குடில் நிர்வாகம்.

4 comments:

  1. தஙகள் பணி சிறக்க வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா..

      Delete
  2. நல்ல பணி சிறப்பாய் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வாழ்த்து நம் செயல்பாடுகளை சிறப்படைய செய்யட்டும். நன்றி. :)

      Delete

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_