August 17, 2013

நூலகம் - வெளிப்புறத்தோற்றம்

அன்புத் தோழமைகளுக்கு..

தமிழ்க்குடில் நிர்வாகிகளின் பணிவான வணக்கம்.

நமது தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தற்போதைய செயல்பாடாக, அறக்கட்டளையின் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் அரியலூர் மாவட்டம், சிலம்பூர் கிராமத்தில் இணைய வசதியுடன் கூடிய முன்மாதிரியான ஒரு நூலகம் கட்டப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. 

உங்கள் அனைவரது பேராதரவோடும், ஒத்துழைப்போடும் கட்டிடப் பணி இனிதே நிறைவு பெற்றது என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம். தங்களின் பார்வைக்காக நூலகத்தின் முகப்பு தோற்றம் மற்றும் சில புகைப்படங்களை இங்கேப் பகிர்ந்திருக்கிறோம்.
                         நூலகம் முகப்புத்தோற்றம்
நுழைவாயிலில் பிரபஞ்ச ஓவியம்
  
இயற்கை சூழலில் படிப்பதற்கான இருக்கைகள்







மேலும் சில தினங்களில் நமது நூலகத்தின் திறப்பு விழா நடைபெறவிருப்பதால் திறப்புவிழா பற்றிய விவரங்கள் விரைவில் தங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
நூலகப் பணிக்காக தமிழ்க்குடில் அறக்கட்டளைக்கு நிதியாகவும், நூல்களாகவும், அச்சு எந்திரம் மற்றும் நூலகத்திற்குத் தேவையான பொருட்களாகவும் கொடுத்து உதவிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
 
நூலகத்திற்காக நூல்கள், நிதிகள் சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதால் பங்களிப்பு வழங்க விருப்பம் உடைய அன்பர்கள் விவரங்களுக்கு நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.  

என்றென்றும் அன்புடன்

தமிழ்க்குடில் நிர்வாகம். _/\_

வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!! வெல்க தமிழ்!!!

4 comments:

  1. அன்பின் நிர்வாகிகளே - நூலகம் திறப்பு விழா வெற்றி கரமாக சிறப்புடன் நடைபெற - அனைத்து நூல்களையும் பெற்று பெரியதொரு நூலகமாக விளங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி ஐயா.. தங்களின் வாழ்த்தும், வழிகாட்டலும் நம் அறக்கட்டளையின் செயல்பாடுகளை சிறக்கச்செய்யட்டும். _/\_

      Delete
  2. நூலகத்தின் பணிகள் தொடர்ந்து வெற்றிபெற அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா..தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி. தங்களின் வாழ்த்து நம் செயல்பாடுகளை சிறக்க செய்யட்டும். தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறோம். _/\_

      Delete

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_