January 29, 2015

தமிழ்க்குடில் அறக்கட்டளை கவிதை, கட்டுரைப்போட்டி பரிசுகள்

அன்புத்தோழமைகளுக்கு,

தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள்.

தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்திய கவிதை, கட்டுரை மற்றும் பெண்களுக்கான சிறப்புக் கட்டுரைப்போட்டியில் பரிசுபெற்றவர்களுக்கு அறக்கட்டளை அறிவித்திருந்தபடி பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வெற்றிபெற்ற அனைவருக்கும் மீண்டும் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். :) 

முதல் பரிசு -  காசோலை மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ்

கவிதைப்போட்டி முதல் பரிசு    திருமதி. மாலினி பாலாஜி  - ரூ.1000/- 

கட்டுரைப்போட்டி முதல் பரிசு       சே. குமார்        - ரூ.1000/-

பெண்களுக்கான சிறப்பு
கட்டுரைப்போட்டி முதல் பரிசு   ஜா மீரா பவானி    - ரூ.1500/-
இரண்டாம் பரிசு தமிழ்க்குடில் அறக்கட்டளையின் சிறப்புப் பரிசாக தமிழ் கடிகாரம் மற்றும் சான்றிதழ்.
கவிதைப்போட்டி இரண்டாம் பரிசு           -  திரு. பாரதி. இளஞ்செழியன்   

கட்டுரைப்போட்டி இரண்டாம் பரிசு          - ஜாரா

பெண்களுக்கான சிறப்பு
கட்டுரைப்போட்டி இரண்டாம் பரிசு       -ஸ்டெல்லா தமிழரசி. இர.
மூன்றாம் பரிசு - நூல் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ்

கவிதைப்போட்டி மூன்றாம் பரிசு      -  திரு. பிரசன்னா தமிழ்

கட்டுரைப்போட்டி மூன்றாம் பரிசு      - திரு. பா. முத்துராஜ்   

பெண்களுக்கான சிறப்பு
கட்டுரைப்போட்டி மூன்றாம் பரிசு    - மணிமேகலை கைலைவாசன்

பெண்களுக்கான சிறப்பு
கட்டுரைப்போட்டி மூன்றாம் பரிசு    - அபிராமி உமாஷங்கர்
இனிவரும் போட்டிகளிலும் பெருமளவில் பங்குகொண்டு சிறப்பிக்கும்படியும், தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தொடர்ந்த செயல்பாடுகளில் தங்கள் கரம்கோர்த்து பயணிக்க வேண்டுகிறோம்.

என்றென்றும் அன்புடன்,

தமிழ்க்குடில் அறக்கட்டளை




January 12, 2015

பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் - 2015

அன்புத்தோழமைகளுக்கு, 
தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள்.  

தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை நமது இளஞ்சிறார்களிடையே சென்றடையச்செய்து அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில், தமிழ்க்குடில் அறக்கட்டளை 2014 தமிழர் திருநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகளை நடத்தியது தாங்கள் அறிந்ததே. முதல் முயற்சியாக சென்ற ஆண்டு(2014) அரியலூர் மாவட்டம் சிலம்பூர் கிராமத்தில் போட்டிகளை நடத்திய தமிழ்க்குடில் அறக்கட்டளை  இந்த ஆண்டு அரியலூர் மாவட்டம் சிலம்பூர், ஆண்டிமடம் ஆகிய ஊர்களிலும், தஞ்சை மாவட்டம் புனல்வாசல் கிராமத்திலும் மற்றும் கோவை மாவட்டம் புதுக்காடு கிராமத்திலும் போட்டிகளை நடத்தவிருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்ற மாவட்டங்களிலும் இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம்.

 நடத்தபடும் விளையாட்டு போட்டிகள்: 
1.   உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள்
         ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கபடி

2.  மனப்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள்   
        கோலாட்டம், கும்மி, இசை நாற்காலி

3. அறிவுசார்ந்த விளையாட்டுகள்               
         சதுரங்கம், ஆடுபுலி ஆட்டம், கண்ணாமூச்சி 

4. ஞாபக சக்தி சார்ந்த விளையாட்டுகள்      
        நடித்துக்காட்டுதல், ஒப்புவித்தல், பொருட்களை அடையாளம்காணுதல்.

இது போன்ற தலைப்புகளில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை பிரித்துகொண்டு போட்டி நடத்தி பரிசும், சான்றிதழும் வழங்கி மாணவர்கள் சிறப்பிக்கப்படுவர். தங்களுடைய தொடர்ந்த ஒத்துழைப்பையும் ஆதரவையும் தமிழ்க்குடிலுக்கு  தந்து தமிழ்க்குடிலின் இப்பயணத்தில் தொடர்ந்து இணைந்திருக்க தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம். 

என்றென்றும் அன்புடன் தமிழ்க்குடில் நிர்வாகம்.

December 11, 2014

2014 மகாகவி பிறந்ததின போட்டி பரிசு பெற்றவர்கள் விவரம்...

வாழ்த்துகள்......:)

அன்பு சொந்தங்களுக்கு அன்பான வணக்கம், 

மகாகவி பாரதியின் 132வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்திய கவிதை, கட்டுரை மற்றும் பெண்களுக்கான சிறப்பு கட்டுரை போட்டியின் முடிவுகளை இன்று அறிவிப்பதாக சொல்லியிருந்தோம்.  தோழமைகள் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறியக் காத்திருப்பீர்கள் என்பதால் இதோ தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் முடிவுகள்..

முடிவுகள் அறியும் முன்பு, தங்களுடைய வாழ்க்கைப்பணி, தமிழ்ப்பணி என பல பணிகளுக்கு நடுவில், தங்களுடைய  சிரமம் கருதாமல் நம் தமிழ்க்குடிலுக்காக குறுகிய கால அவகாசத்தில் சிறந்த கவிதைகளையும், கட்டுரைகளையும் தேர்வு செய்து கொடுத்த நடுவர்கள் பற்றிய சிறு அறிமுகம். அவர்களுக்கு தமிழ்க்குடில் குடும்ப உறுப்பினர்கள்  சார்பாகவும், தமிழ்க்குடில் நிர்வாகம் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

கவிதைப்போட்டிக்கான நடுவர்கள்: 

1. முனைவர் வ.வே.சு அவர்கள்   கவிஞர், பேச்சாளர், கட்டுரையாளர்.  தொலைக்காட்சி, வானொலி என பல மேடைகள் சந்தித்தவர். கவிமாமணி(1987) திருப்புகழ் மாமணி (1999) பாரதி விருது-Chennai Dawn-அமைப்பு(2001) விருதுகள் பெற்றவர்.  கல்லூரி ஆசிரியர். ஓய்வுக்கு முன் ஏற்றிருந்த பணி-முதல்வர், சென்னை விவேகானந்தா கல்லூரி.  கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை- திரையிசையிலும் ஈடுபாடுகொண்டவர்.  எழுதியுள்ள புத்தகங்கள்: தொடமுயன்ற தொடுவானம் (கவிதை நூல்); My review book on Kulothungan's Manuda yaaththirai வெளியிடுவதற்கு தயாராக உள்ளது. தற்போது: Director, Phyco Spectrum Consultants (Pvt)Ltd Chennai. அவருடைய பணிகள் ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் சேவைகள் பற்றி குறிப்பிட எங்களுக்கு விருப்பம் எனினும் படிக்கும் உங்களுக்கு முடிவுகள் அறிவதிலேயே ஆர்வம் காட்டுவீர்கள் என்பதால் திரு.வவேசு ஐயா பற்றிய விவரம் இத்துடன் நிறுத்திக்கொண்டு, அடுத்ததாக  கவிதைபோட்டியில் நடுவராக பொறுப்பேற்றிருக்கும்

2. கவிமாமணி இலந்தை சு.இராமசாமி அவர்கள் இலந்தை சு இராமசாமி, காகுத்தன், வீரபத்ர வில்லவராயன் என்ற புனைப்பெயர்களை கொண்ட கவிமாமணி இலந்தை சு. இராமசாமி அவர்கள், கவிமாமணி, சந்தத் தமிழ்க்கடல், பாரதி பணிச் செல்வர்,  சந்தக்கவிச் சிந்தாமணி என பல விருதுகளை வாங்கி தமிழன்னையின் மகுடத்திற்கு அழகு சேர்த்திருக்கிறார். எமக்குத் தொழில் கவிதை எனக்கூறும் இவர் Divisional engineer, Telephones  பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர் 30 புத்தகங்கள் எழுதியுள்ளார். பேராசிரியர் அ.சீ.ரா வின் மாணவரான இவர். 1000க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். 300க்கும் மேற்பட்ட கவியரங்கத் தலைமை சந்தவசந்தம்,  மரபுமலர்கள் குழுமங்களின் மட்டுறுத்துனராக உள்ளார். கவிதை, இலக்கியம், மொழிபெயர்ப்பு, சொற்பொழிவுகளில் ஈடுபாடுகொண்டவர். இவர் எழுதிய நூல்களில் சில: பாரதி வாழ்வும் வாக்கும், அன்றாடம் மலரும் அறிவியல் பூக்கள், பொருநை வெள்ளம்- கவிதைத் தொகுதி) வள்ளுவ வாயில் மற்றும் பல.

கட்டுரைப் போட்டியின் நடுவர்கள்

1. இராஜ.தியாகராஜன் அவர்கள் புதுச்சேரியில் வசிக்கும் இவர், இளங்கலை (பொருளாதாரம்), ஒரு கணினிப் பட்டயம் படித்திருந்தாலும் தமிழின்மீது இவர் கொண்ட காதல் வார்த்தையில் அடங்காது. நம் தமிழ்க்குடில் ஆண்டுவிழாவில் நிகழ்ந்த கவியரங்கத்திற்கு தலைமையேற்ற இவர் அனைவருக்கும் பரிச்சயமானவரே. இவரைப்பற்றிய விவரங்கள் முழுவதும் வழங்கினால் படிக்கும்பொறுமை தங்களில் இருக்குமா எனும் அளவு ஏதும் செய்திடவில்லை எனமிகுந்த தன்னடக்கத்துடன் கூறிக்கொள்ளும் இவர் பெற்ற விருதுகள் விவரம்: நிலவுப் பாவலன் விருது, பாவேந்தர் பற்றாளர் விருது, மகாகவி பாரதி விருது. நடுவண் அரசு ஆதரவுடன் வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளன் விருது.  மின்னிதழும் நடத்திவருவதோடு, தமிழ் ஒருங்குறியில் வலைப்பூ உருவாக்கியிருக்கிறார்.  இதுவரை தோராயமாக1000த்திற்கும் அதிகமான பாக்கள் எழுதியுள்ளார்.  கணினியில், இணையத்தில் தமிழ், தமிழ், தமிழ், தமிழ், தமிழ் கூடவே கர்நாடக இசை என்று  சொல்லப்படும் தமிழிசையில் ஈடுபாடு உடையவர். இணையத்திலும், இதழ்களிலும் நிறைய எழுதியிருந்தாலும், நூலென்று இதுவரை வெளியிட வில்லை.   நான்கைந்து ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி, மின்னிதழ் வாயிலாக அனைவருக்கும் பயன்படத் தருகிறார். அவருடைய வலைப்பூக்கள்:


2.முனைவர் அண்ணாகண்ணன் அவர்கள் கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 19 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ!, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். மும்பையில் இயங்கும் மொஃபர்ஸ்ட் நிறுவனத்தின் தமிழ் மொழியாக்கக் குழுவுக்குத் தலைவராகவும் இருக்கிறார்.

நடுவர்களுக்கு மீண்டும் உங்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதோடு போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விவரங்கள் தங்கள் பார்வைக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

கவிதைப்போட்டி:

முதல் பரிசு               :      மாலினி பாலாஜி – முதல் கவிதை    

இரண்டாம் பரிசு      :      திரு.இளஞ்செழியன் – நான்..நான்..நான்..             

மூன்றாம் பரிசு         :      பிரசன்னா தமிழ் – என்னுடைய பங்கு

கட்டுரைப்போட்டி:

முதல் பரிசு               :       - பரிவை. சே.குமார் – வெளிநாட்டு வாழ்க்கை           

இரண்டாம் பரிசு      :       ஜாரா – என் வாழ்வில் பெண் என்பவள்

மூன்றாம் பரிசு         :       முத்துராஜ் தமிழகத்தில் அகத்தியலில் ஆணும் புறத்தியலில்                                                                          பெண்ணும் 

பெண்களுக்கான சிறப்பு கட்டுரைப்போட்டி:

முதல் பரிசு                :     மீரா ஜானகிராமன்  -   நான் படைக்க விரும்பும் சமூகம்.

இரண்டாமிடம்          :     சித்திரப்பாவை(ஸ்டெல்லா தமிழரசி) பெண்                             
                                              விரும்பும் ஆணின் பரிணாமம்- காதலன்,   கணவன், மகன்.

மூன்றாமிடம்           :    அபிராமி உமாசங்கர் மற்றும் மணிமேகலை கைலைவாசன் 
                                              நான் படைக்க விரும்பும் சமூகம் 

குறிப்பு: மதிப்பீட்டில் அதிக வித்தியாசம் இல்லாத காரணத்தினால், நடுவர்களின் பரிந்துரையால் இருவருக்கும் மூன்றாம் பரிசு வழங்கப்படுகிறது.

பரிசு பெற்ற அனைவருக்கும் நடுவர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் குடும்ப உறுப்பினர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

போட்டியில் பங்குகொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியும், வாழ்த்துகளும்.
இனிவரும் போட்டிகளிலும் தொடர்ந்து பெருமளவில் பங்குகொண்டு சிறப்பித்து தமிழ்க்குடிலின் செயல்பாடுகளில் தொடர்ந்திருக்க வேண்டி வாழ்த்தி விடைபெறுகிறோம்.

என்றென்றும் அன்புடன்,

தமிழ்க்குடில் அறக்கட்டளை

பெண்களுக்கான சிறப்புக் கட்டுரைப்போட்டி- மூன்றாம் பரிசு

நான் படைக்க விரும்பும்  சமூகம்.. - மணிமேகலை கைலைவாசன்
''பார்வைகள் வெறும் காட்சிகளைக் காண்பதற்காக
 மட்டுமல்ல..
சில தீர்வுகளைக் காண்பதற்காகவும் தான்''.

இனிதான ஒரு சமூகம் உலகமெங்கும் உருவாகவேண்டுமென்ற  ஆசை எனக்கு எப்போதும் உண்டு.

''வறுமை காணாத முகங்கள்..
வாடி நிற்காத பயிர்கள்..
அழுகை மறந்த மழலைகள் ..
சோகம் மறந்த பெண்கள் ..
வாழ்வை நேசிக்கும் முதிய குழந்தைகள் ..
அழகைமட்டும் சுமக்கும் இயற்கை..
அழியாத நட்பு..
என்று எத்தனையோ  ..எத்தனையோ..
பாரதி மனம் மகிழ் வான்...என் நம்பிக்கைகளோடு  தொடர்கிறேன்.

உலகப்படம் கண்முன்னே எத்தனை அழகாய் சுழல்கிறது பாருங்கள் ?
ஆனால் அதற்குள் வாழும் சமுதாயம் ?  ?..
முழுமையான  அழகோடு தானா..?
வினாக்கள் மேலும் மேலும் வினாக்களாகவே தொடர்கின்றன.விடைகள்..இன்னமும் கண்டுபிடிக்கப் படாதவைகளாகவே.

       மனித இனம் இயற்கையுடன் சேர்ந்து படைக்கப் பட்ட விதம் .நோக்கம் மகிழ்ச்சி மட்டுமே.
தனி மனிதனின் சந்தோசங்களில் சமுதாயத்தின் பங்கும் 
சமுதாயத்தின் முன்னேற்றங்களில்  தனிமனிதனது பங்கும் கட்டாயம் இருக்கவேண்டியது அவசியமே.

           கூட்டுக்  குடும்பங்களாக மனிதன் வாழ நேரிட்ட போதுஒவ்வொரு மனிதனுடைய மகிழ்ச்சியும் உடனுக்குடன் பகிரப்பட்டது.பிரச்சனைகள் ,துன்பங்கள் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டன.மன அழுத்தங்களற்ற,நோய்களற்ற இனிய சமுதாயம் மிக மிக அழகாக வாழ்த்தப்பட்டது.ஆனால் இன்று..??..தனித் தனிக் குடும்பங்கள்..தனித் தனிக் கவலைகள் தனியே உணவு தனியே உறக்கம் என்று தன்னைச் சுற்றி துன்ப   வேலி         போட்டு வாழும் மனிதன்.....விளைவு..?
இசையைத் தொலைத்த மூங்கில் காடு போலத் தான்.

                பெண்கள் பக்கம் பார்வைவையை கொஞ்சம் நகர்த்துகிறேன்.
வாழ்வியலில் பெண் அனுபவிக்கும் துன்பங்கள் ஆணை விட அதிகமென்பேன்.அதிக மனோதிடமும் ,மகா சக்தியும் கொண்டவள் பெண்தான்.ஆனாலும் அவள் திறமைகள் பெருமைகளைத் தட்டிக் கொடுக்கும் ஆணினம் மிகக் குறைவே.பெண்ணின் நிறை குணங்களைப் போற்றிட ஆண்கள் முன்வர வேண்டும்.
     தன்னில் பாதி ..  தன்    உணர்வில் பாதி உயிரில் பாதி என்று திருமண ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் கூட பெண்ணின் முன்னேற்றம்  கண்டு சற்று எரிச்சலடைவதைக் காண்பீர்கள்.இது தவிர்க்கப் பட வேண்டிய ஒன்றே.
தாயே ஆனாலும் ,தாரமே ஆனாலும் மகளோ..,மருமகளோ,பேத்தியோ பாட்டியோ ஆனாலும் பெண் போற்றப்படவேண்டியவளே..
பெண் போற்றப்படும் இல்லங்களில் என்றும் நிரந்தர மகிழ்ச்சியே.மாறாக பெண் துன்புறுத்தப் படும் வீடுகளைப் பாருங்கள் அங்கே நிம்மதி தூரமே.
அடிப்பது  ,உதைப்பது மட்டும் துன் புறுத்தல் அல்ல..வார்த்தைகளால் நோகடிப்பதும் தான்.
பெண் பூமி என்று புகழப் படுகிறாள்.உயிரைப்பிரசவித்து தானும் மறு ஜென்மம் கண்டு தாய் எனும் பிறவி காண்கிறாள்.பெண்மையைப் போற்றிடும் சமுதாயத்தை எதிர்பார்க்கிறேன்.

 மழலைகளிடம் வருகிறேன் ..
.சிறுவர்கள் சரியான முறையில் வளர்க்கப் படுகிறார்களா..?என்ற கேள்விக்கு   இல்லை என்ற பதில் தான் எனது.வேலை வேலை என்று இரவு பகலாக உழைப்பிலேகவனம்  கொண்டவர்களால் பிள்ளைகளுக்கான பாசத்தைக் கூட சரிவர வழங்க முடியாது.
''ஓயாத தொலைக்காட்சி நாடகங்களின் கவனம் பெண்களை தன்னகத்தே கட்டி வைத்திருக்க மழலைகளோ  பசி மயக்கத்தில்..''
புரிந்து கொள்ளுங்கள் சகோதரிகளே ..
பாப்பா பாட்டு பாடிய பாரதி மீண்டும் வந்தால் குழந்தைகளை சரிவரக் கவனிக்காத பெற்றோரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவைத்தாலும் வைப்பான்.
           மின் கணணி.பொம்மை கூட ஆயிரம் இருந்தாலும் தாலாட்ட சில கணங்கள் போதுமே..
தாலாட்டுவது  தாய்மை மட்டுமே.தாலாட்டு மறுபடி தாயின் வாயால் 
இசைக்கப் படுமா..?என்ற நப்பாசை எனக்குள்.
அத்தனை உறவுகளையும் ஒரு பாடலுக்குள் சொல்லித் தருவது தாலாட்டல்லவா...?

   அடுத்த படியாக   முதியவர்களின்  எதிர்காலம்  எனக்குள்  வினாவாகிறது.முதுமை அனுபவங்களின் பொக்கிஷம்.ஆனாலும் முதுமை காரணமாக எதற்கும் உதவாதவர்கள் என்றெண்ணி  உடைந்த நாற்காலி போலே ஓரங் கட்டப்படுதல் வேதனை..
உடைகிறது அவர்களின் மனங்களும் இங்கே...
கணவன் மனைவி ..அவர்கள் முதுமைக் காலத்தில் இருந்தாலும் தனித் தனியே அவர்கள் ஒவ்வொரு பிள்ளைகளிடமும் வாழவேண்டும் என்று யாரும் ஆலோசனை சொல்லாதீர்கள்..செய்யாதீர்கள்.பிள்ளைகள் மீது கொண்ட பாசம் காரணமாக அவர்கள் அதற்கு ஒத்துக் கொண்டாலும் மனதளவில் நொந்தும் வெந்தும்   போயிருப்பார்கள்.கடவுள் இணைத்த பந்தத்தை பிள்ளைகள் கூட பிரிக்க வேண்டாமே..

       இனி.....
..... நட்பெனும் சோலைக்குள் கொஞ்சம் நடந்து செல்கிறேன் .எத்தனை வருடங்கள் ,நூற்றாண்டுகள் கடந்தாலும் ஆணும் பெண்ணும் நட்பு என்றதும் உடல்களுடன் தொடர்பு படுத்தியே தவறாகக் காண்கின்ற சமுதாயம் தன் குப்பை  எண்ணங்களை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்பேன்.
''உடல் ரீதியானது நட்பல்ல ..அது மனம் ,சிந்தனை,அன்பு ரீதியானது
எந்த விண்கலமும்  தேவையில்லை மனம் என்ற வானத்தை கண்டறிய.''
கொஞ்சம் உழுது பயிர் செய்தால் போதுமென்பேன்.

        இறைவன் படைத்த அத்தனை இயற்கையும் அழகாக இருக்கிறதே  ..மனிதன் மட்டும் ஏன்அழகாக மனம் படைக்க மறுக்கிறான்..?
மறக்கிறான்..?
மனிதன் நினைத்தால்  அழகாக உருவாக்கலாம்..
உருவாக்குவானா  ?...

என்  மனதின் வண்ணங்களை புள்ளிக்  கோலங்களாய்  வரைந்திருக்கிறேன் .
இதில் கொஞ்சமாவது வாசகர்களின் எண்ணங்களைக் கவர்ந்திருந்தால் அது வெற்றியே..அத்தனை வேண்டுதல்களையும் ஒன்றாக்கிப் பாருங்கள்   அழகான கூட்டுக் குடும்பம் கண்முன்னே நிழலாடும் ..
.வாழ்க தமிழ்.  
வாழ்க பாரதி நாமம்