அன்புத்தோழமைகளுக்கு,
தமிழ்க்குடில் நிர்வாகியின் அன்பு வணக்கம்.
நமது தமிழ்க்குடில் அறக்கட்டளை, சென்னை குரோம்பேட்டையில் இயங்கிவரும் தூய
மாற்கு பதின்முறை மேல்நிலைப்பள்ளியில் மார்ச் மாதம் முதல் தேதியன்று
பரிசளிப்பு விழா ஒன்றை நடத்தியது.
ஏதோ போட்டிக்காக ஒரு நாள்
மட்டும் என்றில்லாமல் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள், தொடர்ந்து
வகுப்பில் தமிழ் கையெழுத்தை செம்மையாக எழுதிவருவதைப் பாராட்டி
தமிழ்க்குடில் அறக்கட்டளை நினைவுப்பரிசும், நூல்களும் வழங்கிப்
பாராட்டியது.
மாணவர்களின் இச்செயலில் ஆசிரியர்களின் பங்கும்
பெரிதென உணர்ந்து தமிழ்த்துறை ஆசிரியர்களுக்கும் நினைவுப்பரிசும்,
நூல்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
பள்ளிக்கு நினைவுப்பரிசும், நூலகத்திற்கு தமிழ் சொல்லகராதியும் வழங்கப்பட்டது.
தவத்திரு மறைமலையடிகள் அவர்களின் பேரன் மறை தி. தாயுமானவன் அவர்கள் விழாவின் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தலைவர் திரு. தமிழ்க்காதலன் அவர்கள்
தமிழ்க்குடில் பற்றியும் மாணாக்கர்களின் திறமையையும் பாராட்டினார்.
பொருளாளர் காயத்ரி வைத்தியநாதன் நன்றியுரையாற்றினார்.
மறை. தி. தாயுமானவன் அவர்கள், அவரது துணைவியார் திருமதி வாசுகி அவர்கள், தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தலைவர்
திரு, தமிழ்க்காதலன் அவர்கள், பொருளாளர் காயத்ரி வைத்தியநாதன் மற்றும்
தமிழ்க்குடிலின் குடும்ப உறுப்பினரான சகோதரர் திரு.இராமச்சந்திரன் அவர்கள்
மாணவர்களுக்கும், தமிழ்த்துறை ஆசிரியைகளுக்கும் தமிழ்க்குடில் சார்பாக
கேடயங்களையும், நூல்களையும் வழங்கி சிறப்பித்தனர்.
விழா சிறப்பாக
அமைய முழு ஒத்துழைப்பு வழங்கிய பள்ளி நிர்வாகத்திற்கும், விழா
ஒருங்கிணைப்பில் பெரிதும் பங்குகொண்ட சகோதரர் திரு. இராமச்சந்திரன்
அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்,
என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில் நிர்வாகம். 

No comments:
Post a Comment
தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_