தமிழ்க்குடில் அறக்கட்டளை
முதலாமாண்டு அறிக்கை
தமிழ்க்குடில் மற்றும்
அறக்கட்டளைத் தோற்றம் :
மனித நாகரீகத்தின் பரிணாம
வளர்ச்சியில் ஆணிவேர் அமிழ்ந்து கிடக்கும் இடமாய் நம் தமிழகம் இருப்பதை உலகம்
ஒத்துக்கொள்ளும் காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலக அரங்கில் தமிழையும், தமிழர்களையும் தலைநிமிரச்
செய்யும் முயற்சியிலும், தமிழர்களுடைய
பாரம்பரிய பண்பாட்டை மீட்டெடுக்கும் சிந்தனையிலும் 2011 ஜூன்
மாதம் முளைத்த சிங்கார குடில்தான் நம்
”தமிழ்க்குடில்.” குடிலின் நோக்கங்களை சமூகத்தில்
செயல்படுத்த தமிழ்க்குடில் அறக்கட்டளை 2012 மே 12ம்
நாளன்று அரியலூர் மாவட்டம்,
உடையார்பாளையம் வட்டம், சிலம்பூர்
கிராமத்தில் தனது தலைமை அலுவலக முகவரியில் பதிவுசெய்யப்பட்டது. பதிவு எண் : 18 IV 12.
குடிலின் முதலாமாண்டு விழா :
2012ம் ஆண்டு சூன் மாதம் 10ம் நாள் சென்னை – குரோம்பேட்டையில் உயர்திரு. புலவர் புலமைப்பித்தன் அவர்களின் தலைமையில் இனிதே
நடந்தது. விழாவில்
சிறப்பு விருந்தினர்களாக இலக்கியச் செல்வர் உயர்திரு. சிலம்பொலி செல்லப்பா, கவிஞர் மற்றும் சமூக ஆய்வாளர்
உயர்திரு. அறிவுமதி, கவிஞர் இரவா. கபிலன் ஆய்வாளர், கவிஞர் திரு. இராச. தியாகராசன் மற்றும் திரு.முருகு. இராசாங்கம் பத்திரிக்கையாளர் ஆகியோர் கலந்து
கொண்டு விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்தார்கள்.
விழாவின்
தொடர்ச்சியாக, அறக்கட்டளை அறிமுகம் செய்யப்பட்டு, தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு விழாமேடையில் உதவிகள் வழங்கப்பட்டன.
வழங்கப்பட்ட உதவிகள் விவரம் வருமாறு:
கல்வி உதவிப் பெற்ற குழந்தைகள் : 108
கல்லூரிக் கல்விக்கு உதவி பெற்றவர் : 1
உதவிப் பெற்ற பள்ளிகள் : 3
திருப்பூரில் நடப்பட்ட மரக்கன்றுகள் எண்ணிக்கை : 90
இந்த ஆண்டின் இறுதிக்காலாண்டில், தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சிலம்பூர் கிராமத்தில்,
கணினி மற்றும் இணைய வசதியுடன் கூடிய நூலகம் ஒன்றை அமைக்க முடிவு செய்து,
அதன்படியே கட்டிடப் பணிகள் நடந்து வருகிறது. அடுத்த
நிதியாண்டில் நூலகம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என்பதை தமிழ்க்குடில் அறக்கட்டளை
மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்வளர்ச்சியில் தமிழ்க்குடில்:
தமிழரின் தொன்றுதொட்டு வரும்
மிகப்பழமையான பாரம்பரிய பண்பாடுகள் மற்றும் வாழ்வியல் கல்வி, இயற்கை வழி வாழ்வு, மருத்துவம், மற்றும் நாகரீகம் சார்ந்து பல ஆய்வுகள் மற்றும் தமிழில் உள்ள அரிய நூல்கள்
போன்றவற்றையும், அவற்றில் உள்ள பயனுள்ள விடயங்களையும் தமிழக மற்றும்
உலக மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில், தமிழ்க்குடில் தமிழ்
ஆய்வுக்குழு ஒன்றை தோற்றுவிப்பது என்ற முடிவை எட்டியுள்ளது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்
கொள்கிறோம்.
பொதுப்பணியில் தமிழ்க்குடில்:
தமிழ்க்குடில் அறக்கட்டளை, தமிழ்க்குடிலின் நோக்கங்களை மக்கள் முன் எடுத்துச் செல்வதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் பொதுப்பணியில் ஆர்வமுடையவர்களை தமிழகமெங்கும் இனம்
கண்டு, அவர்களை கொண்டு “தமிழ்க்குடில் பொதுத்தொண்டு
குழுக்களை” ஏற்படுத்தி வருகிறது. வரும்
ஆண்டுகளில் அவைகள் குடிலின் நோக்கங்களை மக்களிடம் சேர்ப்பிக்கும் பொதுப்பணியில் ஈடுபடும்
என்பதையும் மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்.
தமிழ்க்குடில் அறக்கட்டளையின்
2012-2013 ம் ஆண்டிற்கான நிதியறிக்கை:
தமிழ்க்குடில் அறக்கட்டளை
|
2012-2013ஆம் ஆண்டிற்கான நிதிநிலை விகித அறிக்கை
|
வ. எண்
|
விவரங்கள்
|
ரூ.
|
செலவு விகிதம் 100%
|
1
|
ஓராண்டு உள்வரவுகள்
|
297730.00
|
|
2
|
ஓராண்டு உள்வரவு கடன் ரொக்கம்
|
47500.00
|
|
3
|
மொத்தம்
|
345230.00
|
|
4
|
ஓராண்டு செலவுகள்
|
307449.56
|
89.06%
|
உட்பிரிவுகளின் அடிப்படையில் விகிதம்
|
5
|
அலுவலகச் செலவுகள்:
|
|
|
6
|
எழுதுபொருள் & அச்சக செலவுகள்
|
4570.00
|
1.49%
|
7
|
அஞ்சலக செலவுகள்
|
1743.00
|
0.57%
|
8
|
பயணச்செலவுகள்
|
9460.00
|
3.08%
|
9
|
பணியாளர் நலன் செலவுகள்
|
7238.00
|
2.35%
|
10
|
எரிபொருள்
|
555.00
|
0.18%
|
11
|
|
|
|
12
|
நிர்வாகச் செலவுகள்
|
|
|
13
|
ஊதியம்
|
4300.00
|
1.40%
|
14
|
வங்கிக்கட்டணம்
|
4662.56
|
1.52%
|
15
|
|
|
|
16
|
பத்திரப்பதிவு செலவுகள்
|
7660.00
|
2.49%
|
17
|
|
|
|
18
|
விழாச்செலவுகள்
|
|
|
19
|
வாடகை
|
7400.00
|
2.41%
|
20
|
ஒலி அமைப்பு செலவுகள்,அரங்க உள் அமைப்பு செலவுகள்
|
3800.00
|
1.24%
|
21
|
இதர செலவுகள்
|
3350.00
|
1.09%
|
23
|
அறப்பணி செலவுகள்
|
|
|
24
|
அறப்பணி - பணம்
|
11800.00
|
3.84%
|
25
|
அறப்பணி - பொருள்
|
43738.00
|
14.23%
|
27
|
சொத்துசார் செலவுகள்
|
|
|
28
|
நூலகத்திற்கான செலவுகள்
|
197173.00
|
64.13%
|
|
|
307449.56
|
100.00%
|
|
|
|
|
நன்றியுரை:
தமிழ்க்குடில் அறக்கட்டளை தனது
அறப்பணிகளை தொடர்ந்து தமிழ்ச்சமுதாயத்துக்கு வழங்கிடவும், தனது நோக்கங்களை செயல்முறைப்படுத்திடவும், தமிழ்க்குடிலோடு
தொடர்ந்து பேராதரவைக் கொடுத்து நிற்கும் அன்புத் தோழமைகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை
நவில்கின்றோம்.
தொடரும் ஆண்டுகளிலும், பணிகளிலும் தொடர்ந்து
நம்மோடு ஒத்துழைப்பு தந்து பணிகள் சிறக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம்,
தமிழ்க்குடில் அறக்கட்டளைக்காக,
தலைவர் - தமிழ்க்காதலன்
செயலாளர் - அனிதா ராஜ்
பொருளாளர் - காயத்ரி வைத்தியநாதன்.