July 22, 2015

மறைமலை அடிகளார் பிறந்ததின சொற்பொழிவு போட்டி


அன்புத் தோழமைகளுக்கு வணக்கம்.

உயர்திரு மறைமலை அடிகளாரின் பிறந்ததினத்தை(15 ஜூலை) முன்னிட்டு ., அவரின் தமிழ்த்தொண்டை நினைவுகூரும் வகையில் தமிழ்க்குடில் அறக்கட்டளை மாறுபட்ட போட்டி நடத்தவிருப்பதாக அறிவித்திருந்தது தாங்கள் அறிந்ததே.  

போட்டி விவரங்கள்.

போட்டி - சொற்பொழிவு.

தலைப்பு  - ”மறைமலை அடிகளாரும் அவரின் தமிழ்த்தொண்டும்”

விதிமுறை - மேலேகுறிப்பிட்ட தலைப்பில் சொற்பொழிவுக்கான கருத்து தயார் செய்து அவரவர் குரலில் சொற்பொழிவாக பதிவு செய்து(MP3 Format ) ஒலிவடிவில் தமிழ்க்குடில் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறோம்.  ஒலிப்பதிவு செய்யும்பொழுது தங்களைப்பற்றிய எந்த விவரமும் கொடுக்காமல் சொற்பொழிவு மட்டும் பதிவு செய்து வழங்கவேண்டுகிறோம்.  தங்கள் பெயர்,தொடர்பு எண், முகவரி புகைப்படம் இவற்றை மின்னஞ்சலில் மட்டும் அனுப்பிட வேண்டுகிறோம். 

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் - tamilkkudil@gmail.com

அனுப்பவேண்டிய இறுதிநாள் - 10.08.15

பரிசு : முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு நூலும், சான்றிதழும் வழங்கப்படும்.

ஒவ்வொரு போட்டியும் நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கருதி பங்குகொள்ள வேண்டுகிறோம்.

நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக. அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் ஆர்வமுடைய மற்றவர்களிடத்தும் பகிர்ந்துகொண்டு தமிழ்க்குடிலின் தொடர்ந்த அனைத்துப் போட்டியினையும் சிறப்பித்துத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

என்றென்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.

1 comment:

  1. இடுகையின் தலைப்பில் "பிறந்ததினம்" என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
    மறைமலையடிகள் "பிறந்தநாள்" என்றுதான் எழுதியிருப்பார்; தினம் என்பது வட மொழிச் சொல்லிலிருந்து வந்தது.(தின், நரேந்திர மோதியின் "அச்சே தின்" நினைவிருக்கிறதா?)

    ReplyDelete

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_